sun tv serial : மகராசி தொடரில் பாரதியும், புவியும் ஒரே ஊரில் இருந்தாங்க.. அப்போதும் பார்த்துக்கலை... ஒரே வீட்டில் அதுவும் புவியின் சொந்த வீட்டில் இருந்தாங்க அப்போதும் பார்த்துக்கவே இல்லை. கோயிலுக்கு போய் பாரதியைப் பார்க்கலாம்னு போறான்.. அங்கேயும் இதே நிலை. இப்படியா படபடக்க வைப்பீங்க?
Advertisment
மகராசி சீரியலின் கதையே இதுதானா என்று சொல்லும்படி இழுவை ஜாஸ்தியா இருக்கு. பாரதியின் சித்தப்பாவுக்கு பயந்து புவி தன் வீடுன்னு தெரியாமலே ஒளிஞ்சுக்க வேண்டிய நிலைமை. அவன் சின்ன வயசிலேயே காணாமல் போயிட்டானா.. அதனால் அடையாளம் தெரியலையாம். இப்படித்தான் கதையில் சொல்றாங்க. தன்னை அடையாளம் தெரியாம இருக்கணும்னு அந்த ரூமுக்குள்ளே எதுக்கு விக் வச்சு இருந்தாங்களோ தெரியலை. அதை எடுத்து மாட்டிகிட்டு அவங்க வீட்டுக்குள்ளேயே பசிக்குதுன்னு சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பிக்க வீட்டார் வந்து புடிச்சுட்டாங்க.
அவனுக்கு உடனே பசிக்கு சாப்பாடு போட்டு மில்லில் வேலை போட்டு கொடுக்கறாங்க.. அவனை யாருன்னு வந்து கீழ பார்க்க பாரதி வருவா வருவான்னு எல்லாரும் ஆவலா பார்த்துக்கொண்டு இருக்கும்போதே புவியை அன்புன்னு அவன் சொன்னபேரை நம்பி அவனை மில்லுக்கு அனுப்பி வச்சுடறாங்க. அப்புறமா பாரதி கீழே வந்து யார்கிட்டே இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருந்தீங்கன்னு கேட்கிறாளாம். நல்லா வியூவர்ஸ் நாடி பிடிச்சு சீரியல் ஒளிபரப்பறாங்க.
Advertisment
Advertisements
சரி.. இப்போ பாரதி மில்லுக்கு போறா.. எப்படியும் புவி பார்த்துருவான்னு சமாதனப் படுத்திக்கொண்டு உட்கார்ந்தா... நான் கோயிலுக்கு போறேன் தமிழ்.. அன்புன்னு ஒருத்தரை வேலைக்கு சேர்க்கறேன்னு சொல்லி இருந்தேன் இல்லே.. அவரை வேலைக்கு சேர்த்துருங்க தமிழ்னு சொல்றா பாரதி. இப்போதும் ஏமாற்றம்... சரி அண்ணி என்று தமிழும் புவியை வேலைக்கு சேர்த்து விடுகிறான்.
ஒரு வழியா சிதம்பரம் ஐயா வீடுதான் தான் பிறந்த வீடு.. அவர்தான் தன்னோட அப்பா, வீட்டில் மகராசியா இருந்தவங்க தனது அம்மான்னு ஒரு முடிவுக்கு வந்து சொல்லிடலாம்னு வீட்டுக்கு கிளம்பறான். அப்பாடின்னு பெருமூச்சு விட்டுட்டு உட்கார்ந்து இருக்காங்க வியூவர்ஸ். வீட்டுக்கு வந்து போட்டோவைப் பார்த்துட்டு நிற்க.. அப்போ நாம எதிர்பார்த்த மாதிரியே ஒரு கனவு. அப்பா அம்மான்னு புவி சொந்தம் கொண்டாடி இருப்பதை பார்த்த பாரதியின் சித்தப்பா அம்மாவை கத்தியால் குத்துவது போல..
அப்புறம் என்ன.. உண்மையை சொல்லும் முடிவை கை விட்டுடறான் புவி. சரி, மனைவி பாரதியிடமாவது உண்மையை சொல்லலாம்னு புவி நினைக்கற மாதிரி இன்னும் ஒரு டிவிஸ்ட் வைக்கறாங்க. அந்த டிவிஸ்டாவது சீக்கிரம் முடியும்னு பார்த்தால்.. கோயிலில் இருக்கும் பாரதியை சந்திக்க போனால் கோயிலில் பாரதி புவியின் கண்ணில் தென்படவே பல தடைகள். மெதுவா அவன் பின்னால் வருவதை பாரதி உணர்ந்து இவன் எதுக்கு நம்ம
பின்னாடி வர்றான்.. சரி பார்க்கலாம்னு பாரதி நடக்கறா... முடிச்சுட்டாங்க. நாளைக்கு பார்க்கலாம்.