மஹா போஸ்டர் சர்ச்சை: ஹன்சிகா மோத்வானி மீது வழக்கு பதிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hansika motwani, ஹன்சிகா மோத்வானி

hansika motwani, ஹன்சிகா மோத்வானி

மஹா திரைப்படம் போஸ்டர் ஒன்றில் துரவி வேடத்தில் புகைப்பிடிக்கும் ஹன்சிகா மோத்வானி போஸ்டர் சர்ச்சையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடித்துள்ள படம் மஹா. ஹன்சிகாவின், 50ஆவது படமாக அமைந்துள்ள இத்திரைப்படத்தை, எக்ஸ்ட்ரா எண்டெர்னடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹன்சிகா மோத்வானி மீது வழக்கு

இப்படத்தின் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடிப்பது போன்று காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் சர்ச்சைக்குள்ளானது.

Advertisment
Advertisements

இது இந்து மதத்துக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், ஹன்சிகா மற்றும் இப்படத்தின் இயக்குநர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகர காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

Complain against hansika motwani, ஹன்சிகா மோத்வானி

முன்னதாக இந்தப் புகைப்படத்தை எதிர்த்து பா.ம.க பிரமுகர், படத்தின் இயக்குநர் ஜமீல் மற்றும் ஹன்ஷிகா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், மஹா படத்தின் போஸ்டர் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

Tamil Cinema Hansika Motwani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: