விஜய் டிவியில் பார்வையாளர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பிரவீன் பென்னட். பாரதி கண்ணம்மா சீரியலை முடித்ததும் முழுவதும் புதுமுக நடிகைகளை வைத்து மகாநதி தொடரை இயக்கி வருகிறார். மகாநதி சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சகோதரிகளின் பாசக் கதை என்ற அறிமுகத்துடன் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், மகாநதி சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரதிபா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாநதி சீரியலில் நான்கு சகோதரிகளில் மூத்த சகோதரி கதாபாத்திரத்தில் பிரதிபா நடித்து வருகிறார். இவர் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில்தான், விஜய் டிவி எக்ஸ்பிரஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதிபா மகாநதி சீரியலில் விலகியதாகவும் அவருக்கு பதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேசன் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி திவ்யா கணேசன் நடிக்கும் காட்சிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“