scorecardresearch

அந்தத் தொழில் செய்த நடிகை: பொறி வைத்து பிடித்த போலீஸ்!

பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகையை போலீசார் கைது செய்தனர்.

Maharashtra Cops Bust Sex Racket
நடிகை வறுமை காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

புனேவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போஜ்புரி நடிகை மற்றும் இரண்டு மாடல் அழகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்பேரில் நடிகையை பொறிவைத்து பிடித்தனர்.

நடிகை வறுமை காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
புனேவின் வகாட் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த நடிகை மற்றும் மாடல் அழகிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இவர்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளனர் என்ற தகவலையும் போலீசார் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Maharashtra cops bust sex racket