/indian-express-tamil/media/media_files/LbBV8HMKyy0M53JbE5yM.jpg)
தமிழ் சினிமாவின் மொழியை மிகச் சரியாக கையாண்டவர் மகேந்திரன். பாடல்களாலும், வசனங்களாலும், நிரம்பிய தமிழ் சினிமாவை, காட்சிகள் மூலம் நகர்த்தி, திரைமொழியை சரியாக பயன்படுத்தியவர்.
அவர் எடுத்த படங்கள் வித்தியாசமாக இருந்தது. பல விமர்சகர்களின் பாராட்டை பெற்ற படங்களாவும் அமைந்தன. இப்படிபட்ட இயக்குநர் சினிமாவை நேசித்து சினாவிற்குள் வந்தவர் இல்லை. சினிமாவை கடுமையாக விமர்சித்தவர்தான் மகேந்திரன். மகேந்திரனின் வியக்க வைக்கும் திறமைதான், சினிமா அவரை இருக்கமாக அணைத்துக்கொண்டது.
25 ஜூலை, 1939ம் ஆண்டு ஜோசப் செலியா – மனோர் மணியம் என்ற தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். இவருடைய அப்பா ஒரு ஆசியர். இவருடைய சிறுவயதில் இளங்கொடி என்ற கிராமத்தில் அவர் பள்ளிப் படிப்பை முடிக்கிறார். பி.யு.சி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடிக்கிறார். பி.ஏ எகனாமிக்ஸ், அழகப்பன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கிறார். கல்லூரி படிக்கும்போது நாடகங்களில் ஈர்ப்பு கொண்டு மிக ஆர்வமாக உள்ளார். அவருக்கு சினிமா மீது இருந்த பார்வை வேறு, அதனால் எம்.ஜி.ஆர் முன்பு தன்னுடைய விமர்சனத்தை வைக்கிறார். எழுத்தாளர் தி. ஜானகிராமன், புதுமை பித்தன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டவர். தமிழ் படங்களை மட்டும் பார்த்த மகேந்திரனிடம் ஆங்கிலப் படங்களை பார் என்று அவரது மாமா கூறுயிருக்கிறார்.
அப்படி ஆங்கில படங்களை பார்த்தபோதுதான் , எதார்த்த சினிமாவில் இருந்து தமிழ் சினிமா எவ்வளவு விலகி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். அப்படிபட்ட ஆத்திரத்தில் இருந்தபோது, கல்லூரி விழாவில் எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசி உள்ளார். “ ஊரில் யார் காதலித்தலும், அதற்கு பெற்றோர், கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கும். இங்கே இருக்கும் ஒருவர் யாரை காதலித்தாலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று பேசி உள்ளார். இவரது பேச்சு தமிழ் சினிமாவை, விமர்சிப்பதாக இருந்தாலும் பெரும்பாலும், எம்.ஜி.ஆரை விமர்சிப்பதாக இருந்தது. இதனால் எம்.ஜி.ஆர் கோவமடையவில்லை. அவரும் இவர் பேச்சை கைதட்டி ரசித்துள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர் கிளம்பும் போது, ஒரு துண்டு பேப்பரில் மகேந்திரனுக்கு ஒரு குறிப்பு எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
நல்ல பேச்சு, நல்ல நகைச்சுவை உண்மையான உணர்ச்சி மிகுந்த விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர், அன்புடன் எம்.ஜி.ஆர் என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. சட்டம் படிக்க வேண்டும் என்று சென்னைக்கு வருகிறார் மகேதிரன். ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவரால், படிப்பை தொடர முடியவில்லை, இதனால் அவரது சொந்த ஊருக்கே சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இன முழக்கம் என்ற பத்திரிக்கையில் சேர்கிறார். திரைப்படங்களை விமர்சிப்பதுதான் இவரது பணி என்பதால், வேலை அதிகம் பிடித்து செய்கிறார். இவர் விமர்சித்த பல படங்களில் எம்.ஜி.ஆர் படமும் அடங்கும். இது திராவிட கழகத்தை சார்ந்த பத்திரிக்கை. எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தவர்கள் இந்த விமர்சனத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்த பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று புகார் செய்தார்கள். இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் சி.பி. சிற்றரசர். அவருக்கு மாக்ந்ந்திரனின் எழுத்து மிகவும் பிடிக்கும். இதனால் அவர் வேலையைவிட்டு நீக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்-க்கு ஏற்பட்ட விபத்தால், சில மாதங்கள் கழித்து அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். அப்போது மகேந்திரன் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கேள்விகளை கேட்கிறார். இப்போது எம்.ஜி.ஆர்-க்கு கல்லூரியில் பேசிய நினைவு வரவே அந்த இளைஞர்தானே நீங்கள் என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மகேந்திரனை , அடுத்த நாள் 10 மணிக்கு வந்து சந்திக்குமாரு தெரிவித்துள்ளார்.
மகேந்திரனும், அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது பொன்னியின் செல்வம் புத்தகத்தை காண்பித்து இதற்கு திரைக்கதை எழுதும் பணியை நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.