தந்தை-மகள் பாசத்திற்கு உதவிய கொரோனா: நடிகர் மகேஷ்பாபு போட்டோஸ்

அவளுக்கு மிகவும் பிடித்த நானா. அவர் மீதிருந்து அவளது கைகளை இனி எடுக்க முடியாது.

By: Updated: April 13, 2020, 12:56:57 PM

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது ஏழு வயது மகள் சீதாரா கட்டமனேனியுடன் போதுமான நேரம் செலவிடுவதாக தெரியவில்லை. வழக்கமாக பணி காரணமாக குடும்பத்துடன் போதுமான நேரம் அவருக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் லாக் டவுனால், தனக்கு கிடைத்த நேரத்தை அவர் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

கேரளாவில் கொரோனா : முதல் பாதிப்பிலிருந்து 179 நபர்கள் டிஸ்சார்ஜ் வரை; குணமடையும் மாநிலம்

ஏப்ரல் 11 ஆம் தேதி, தனது மகள் சித்தாராவுடன் ஒரு அபிமான புகைப்படத்தைப் ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்ட மகேஷ், “தனிமைப்படுத்தப்பட்ட இரவுகள் !!  வீட்டிலேயே தங்குவது பாதுகாப்பாக இருக்கிறது!” என்று தலைப்பிட்டிருந்தார். படத்தில் அப்பாவும் மகளும் மனம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

முடக்கம் அறிவிக்கப்பட்டதும், மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோட்கர் இன்ஸ்டாகிராமில், சித்தாரா தனது நானா (தந்தை) உடன், தனக்கு மிகவும் தேவையான நேரத்தை பெறுவார் என்பதை வெளிப்படுத்தினார்.

மகேஷ் பாபு மற்றும் சித்தாரா ஆகியோரைக் கொண்ட புகைப்படங்களின் ஒரு படத்தொகுப்பைப் பகிர்ந்த நம்ரதா, ”21 நாள் பூட்டுதலைக் கேட்ட அவள், மகிழ்ச்சியுடன் க்ரேஸியானாள். வரும் நாட்களில் அவள் பார்க்கப் போவது அவளுக்கு மிகவும் பிடித்த நானா. அவர் மீதிருந்து அவளது கைகளை இனி எடுக்க முடியாது. கொரோனாவின் காலத்தில் வாழ்க்கை !!” என்று குறிப்பிட்டிருந்தார்.

Corona Updates Live: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை

மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா மற்றும் குழந்தைகள் கெளதம் மற்றும் சித்தாரா ஆகியோருடன் தரமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mahesh babu spending self quarantine with daughter sitara and family

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X