மேடம் டுசாட்ஸில் உருவாக இருக்கும் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு மெழுகுசிலை அமைக்கப்பட உள்ளது. தென்னிந்தியாவின் நடிகருக்கு மெழுகு சிலை அமைப்பது இதுவே முதல் முறை.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு மெழுகுசிலை அமைக்கப்பட உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவருக்கு அந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைப்பது இதுவே முதல் முறையெனக் கூறப்படுகிறது.

mahesh babu wax statue 1

மெழுகு சிலை அருங்காட்சியகமான மேடம் டுசாட்ஸ், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனது அருங்காட்சியகத்தைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் டெல்லியிலும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

mahesh babu wax statue

சமீபத்தில் பாகுபலி படத்தில் வரும், பாகுபலி, கட்டப்பா போன்ற கதாப்பாத்திரங்களையும் சிலைகளாக அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இருப்பினும், தென் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் யாருக்கும் உறுவ சிலை இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த வகையில், ஒரு நடிகராக மகேஷ் பாபுவின் சிலையே முதன் முறையாக உருவாக்கப்பட உள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ் பாபு நன்றி தெரிவித்திருந்தார். இதில், “மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் குழுவில் இருக்கும் அனைவருக்கு நன்றி.” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் மகேஷ் பாபு நடித்து வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் “பாரத் அனே நேனு” படத்தின் வெற்றிக்குப் பிறகு, மெழுகு சிலை உருவாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.

×Close
×Close