அவர் பதினெட்டு வயதுடைய இளம் பெண். ஒரு தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறார். நெட்ஃபிக்ஸில் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ தொடரில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டை தலைகீழாக மாற்றியிருக்கிறார். ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ படத்தில் தேவி விஸ்வகுமார் என்ற 15 வயது சிறுமியாக நடித்திருக்கிறார் கனடாவை சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். இன்று நம்பிக்கைக்குரிய இளம் நடிகைகளில் ஒருவர் என பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
எல்லை பதற்றம்: மத்திய அரசிடம் தெளிவான அறிக்கைக் கோரும் எதிர்க்கட்சிகள்
கனடாவின் ஒன்ராறியோவின் மிசிசாகாவில் 2001 டிசம்பர் 28 ஆம் தேதி மைத்ரேய் பிறந்தார். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவரது பெற்றோர்கள் அகதிகளாக அங்கு குடியேறியிருந்தார்கள். இது அவருக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்ததாக நேர்காணல்களில் கூறிய மைத்ரேயி, தன்னை தமிழ் கனடியன் என்று மட்டுமே அடையாளப் படுத்திக்கொள்கிறார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் இயக்கிய ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ என்ற தொடரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டது. இந்த காமெடி தொடர் இப்போது பலராலும் ரசிக்கப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் லீட் ரோலில் நடித்திருக்கும் 18 வயதே நிரம்பிய மைத்ரேயி 15000 சிறுமிகளுடன் ஆடிசனை அட்டெண்ட் செய்து, இயக்குநரை கவர்ந்தவர். கனடாவில் பள்ளியில் படிக்கும்போதே கலை நிகழ்ச்சி நாடகங்களில் நடித்தும் சிலவற்றை எழுதி இயக்கியுள்ளார்.
Tamil News Today Live: 13 நாட்களுக்குப் பிறகு சென்னையில் 1000-க்கு குறைவான கொரோனா தொற்று
ஆங்கிலத்தில் நடித்தாலும் எப்போதும் தான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்வதாகவும், அதனால் ஒருபோதும் தனது பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் மைத்ரேயி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”