/tamil-ie/media/media_files/uploads/2021/09/makapa-anand.jpg)
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கையில் கட்டு போட்டுக்கொண்டு வந்ததால் சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.
விஜய் டிவியில், சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகபா ஆனந்த்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. கடந்த வாரம், இந்த நிகழ்ச்சிக்கு வந்த மாகாபா ஆனந்த், கையில் கட்டுடன் வந்திருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் உடன் தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல உள்ளதால், அவர் quarantineல் இருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறாது. அதனால், பிரியாங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வர முடியாததால், மாகாபா கையில் அடிபட்ட நிலையிலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மாகாபா ஆனந்து உடன் தீனா ஷோவை தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், மாகாபா ஆனந்த் தனது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும், அவர் தனது எக்ஸ்ரே புகைப்படத்தை பகிர்ந்து "Thumps up taste the thunder" என குறிப்பிட்டு இருக்கிறார்.
மாகாபா ஆனந்த், எக்ஸ்ரே புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு விரையில் குணமாக வேண்டும் என பிராத்திப்பதாக கூறி வருகின்றனர். அதோடு, சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் மாகாபா ஆனந்த்தை நலம் விசாரித்து வருகிறார்கள். விஜய் டிவி தொகுப்பாளர் டிடி "Get wellll sooon" என தெரிவித்துள்ளார்.
அதே போல, இசையமைப்பாளர் மற்றும் நடிகை ஹிப் ஹாப் ஆதி, "Get well soon anna" என பதிவிட்டு உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.