New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Untitled-2-2.jpg)
Malaika Arora and Arjun Kapoor
மலைகா அரோராவிற்கு இப்போது 49 வயது ஆகிறது. அர்ஜுன் கபூருக்கு 37 வயது ஆகிறது.
Malaika Arora and Arjun Kapoor
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜூன் கபூர். இவரும் பிரபல நடிகை மலைகா அரோராவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
மலைகா மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ரயிலில் 'தக்கதய்யா' பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.
இவர் நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை தான் முதலில் திருமணம் செய்திருந்தார். பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.
பிறகு 2019-ல் மலைகா அரோராவும் அர்ஜுன் கபூரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை அறிவித்தனர். மலைக்கா, அர்ஜூன் கபூரை விட 11 வயது மூத்த பெண், மலைகா அரோராவிற்கு இப்போது 49 வயது ஆகிறது. அர்ஜுன் கபூருக்கு 37 வயது ஆகிறது.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மலைகா அரோரா, அதன் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அப்படி மலைகா சமீபத்தில் பகிர்ந்த ஒரு பதிவு தான் இப்போது இணையத்தில் தீயாக பர்வி வருகிறது. அதில் ‘என் சோம்பேறி பையன்’ என்று குறிப்பிட்டு, அர்ஜுன் கபூரின் படத்தை மலைகா பதிவிட்டிருந்தார். அந்த படத்தில், தன் இரு கைகளையும் விரித்து சோம்பலை முறிக்கும் அர்ஜூன் கபூர், வெறும் தலையணையால் உடலை மறைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், அதில் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மலைகாவுக்கு எதிராக எதிர்ப்புகளும் இணையத்தில் கிளம்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.