விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், ரேஸ் பைக் ஓட்டி அசத்திய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பேட்ட படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த மாளவிகா மோகனன், தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் தனது போட்டோக்களை தினமும் பதிவேற்றி தனது ரசிகர்களை தொடர்ந்து தனது கட்டழகில் கட்டிப்போட்டி வருகிறார்.
தனது நடிப்பின் மூலம், ரஜினி ரசிகர்களை கவர்ந்த மாளவிகா, விரைவில் விஜய் ரசிகர்களையும் தன்வசப்படுத்த உள்ளார். இந்நிலையில், அஜித் உடன் படத்தில் நடிப்பதற்கு முன்பே, அவரது ரசிகர்களை தன்பக்கம் எப்படி ஈர்ப்பது என்று யோசித்ததன் விளைவாக தோன்றிய யோசனையை, மாளவிகா, புதிய வீடியோ மூலம் செயல்படுத்தி காட்டியுள்ளார்.
புதிய அவதாரம்
பைக் ரேஸிங் என்றாலே நமது தலையில் உள்ள மூளையில் முதலில் வந்து நிற்கும் மனிதர் தல அஜித் தான். இந்த நிலையில் நடிகை மாளவிகா தற்போது இந்த பைக் ரேஸிங் விளையாட்டில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டி வருகின்றார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் “புது விஷயங்களை கற்றுக்கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் தனக்கு இது மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இதுவரை சாதாரண பைக்களை ஓட்டியுள்ள தனக்கு இது மிகவும் நன்றாக உள்ளது.
“பைக் ஓட்டுவதில் எனக்கிருக்கும் விருப்பத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றேன். சென்ற வருடம் ஜூனில் சில சிறந்த பைக் ரைடர்கள் உடன் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் டிராக்கில் பைக் ஓட்டினேன். நொய்டாவில் இருக்கும் புத் இன்டர்நேஷனல் சர்கியூட் மிரட்டலாக இருந்தது. மற்ற பைக் ரைடர்கள் அளவுக்கு என்னால் வேகமாக செல்ல முடியவில்லை. என் வாழ்க்கையில் நான் சாதாரண பைக்குகளை மட்டுமே ஓட்டியிருக்கிறேன்.”
“ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டிய அந்த நாளை மிஸ் செய்கிறேன். அங்கு கிடைத்த சிறந்த அனுபவத்தையும், உணர்ந்த adrenaline rushயை மிஸ் செய்கிறேன்” என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil