கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் பொது முடக்கம் அறிவித்துள்ள நிலையில், விஜய் பட நாயகி மாளவிகா மோகனன் தனது சகோதரர் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டதால் அவர் மிகவும் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயகுனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஹிரோயினாக நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். ஏப்ரல் மாதமே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படம் கொரோனா பொது முடக்கத்தால் ரீலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களால் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பெரிது எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியானால், நடிகை மாளவிகாவுக்கு ஒரு பெரிய பிரேக் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், லண்டனில் படித்து வரும் மாளவிகா மோகனனின் சகோதரர் ஆதித்யா மோகனன், கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், லண்டனில் பொது சிக்கிக்கொண்டுள்ளதால், மாளவிகா மிகவும் கவலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் தினமும் ஆயிரக் கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். லட்சக்க் கணக்கானோர் கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டுவர போராடிக்கொண்டிருக்கின்றனர். உலக நாடுகல் பலவும் பொது முடக்கம் அறிவித்துள்ளன.
இந்த பொது முடக்க காலத்தில், நடிகை மாளவிகா மோகனன், லண்டனில் வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் படித்துவரும் தனது சகோதரர் லண்டனில் ஒரு சிறிய அறையில், சரியான சாப்பாடு இல்லாமல் சிக்கித் தவிப்பது குறித்து தனது கவலைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மாளவிகா மோகனன் சகோதரர் குறித்து ஊடகங்களிடம் தனது கவலையை பகிர்ந்து கொள்கையில், “தனது சகோதரர் நிலவும் நிச்சயமற்ற சூழலால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் கல்வி நிறுவன வளாகத்துக்கு வெலியே ஒரு வாடகை குவார்ட்ரஸில் வசிக்கிறார். சிங்கிள் பெட் கொண்ட ஒரு சின்ன அறையில்தான் இப்போது இருக்கிறார். பல மாணவர்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் நாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். அவர் மட்டும்தான் தனியாக இருக்கிறார். லண்டன் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அது அவரை மன ரீதியாக மேலும் பாதித்துள்ளது. இந்த சூழலில் அங்கே வசிப்பது செலவு மிகவும் அதிகம். நாங்கள் அவருக்கு பணம் அனுப்பும் நிலையில் இருக்கிறோம். ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாத மாணவர்களின் குடும்பங்களின் நிலை என்ன?
லண்டனில் எனது சகோதரர் ஆதித்யாவின் அறையில் சமைக்க எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. இப்போது உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் செய்வதும் பாதுகாப்பானது அல்ல. அவர் இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். அவரது மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது.
மே 3-ம் தேதிக்குப் பிறகவாது அவர் திரும்பி வர முடியுமா? என்பது எங்களுக்குத் தெரியாது. எனது சகோதரர் ஆதித்யா லண்டனில் உள்ள இந்திய துணை தூதருக்கு பல மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். ஆனால், அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.” என்று மாளவிகா மோகனன் கவலை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.