தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் பட்டம் போலே என்ற மலையாள திரைப்படம் மூலம் மலையாள சினிமாவில் கால்பதித்தார். தொடர்ந்து நிர்நாயக்கம், நானு மட்டு வரலட்சுமி, தி கிரேட் பாதர், பியாண் த கிளவுட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன் தமிழில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியின் பேட்ட திரைபடத்தில் அறிமுகமாகினார். தனது சிறப்பான நடிப்பால் முதல் படத்திலே பெரும் வரவேற்பை பெற்றார். அத்துடன் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார். தொடர்ந்து, அவர் டாப் நடிகரான விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்தப் படத்திலும் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
மாளவிகா மோகனன் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான் மற்றும் யுத்ரா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அவர் ற்போது, தமிழில் 'சர்தார் 2', தெலுங்கில் 'தி ராஜா சாப்', மலையாளத்தில் 'ஹிருதயபூர்வம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சர்தார் 2 படத்தில் கார்த்தி உடனும், ராஜாசாப் படத்தில் பிரபாஸ் உடனும், ஹிருதயபூர்வம் படத்தில் மோகன்லால் உடனும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரே இரவில் இரண்டு விருதுகளை தட்டித்தூக்கி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். அவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். ஐதராபாத்தில் நடந்த ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் மாளவிகா மோகனன் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் அவருக்கு, 'ஹாட்ஸ்டெப்பர் ஆப் த இயர்' மற்றும் 'ஹாட்டஸ்ட் ஸ்டார் ஆப் த இயர்' என்ற இரண்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். மாளவிகா மோகனன் தனது பதிவில், ‘இந்த விருதுகளும் சூடாகவே இருக்கிறது' என்று மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.