சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து, மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்து பல கதைகள் பேசப்படுகிறது. இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்று பேசப்பட்டது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் இடம் பெறுமா என்ற கேள்வி ரசிர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கூலி படக்குழுவினர் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ரஜினிகாந்த்தின் கூலி படத்தில், மஞ்சுமேல் பாய்ஸ் பட நடிகர் சௌபின் சாஹிர் இணைந்துள்ளதாகவும் அவர் இந்த படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
மலையாள சினிமாக்களில் கலக்கி வரும் சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என இயகுனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தயாள் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற மலையாளப் படங்களில் நடித்து முத்திரை பதித்த நடிகர் சௌபின் சாஹிர், ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சௌபின் சாஹிரின் மிரட்டலான கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் படக்குழுவினருக்கு தங்கள் ச்மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“