Advertisment
Presenting Partner
Desktop GIF

தமன்னா உடன் டான்ஸ் ஆடப்போகிறீர்களா? திலீப் மகள் கொடுத்த எச்சரிக்கை

தமன்னா உடன் டான்ஸ் ஆடப்போவதாக கூறிய மலையாள நடிகர் திலீப்; மகள் மீனாட்சி கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?

author-image
WebDesk
New Update
Bandra

தமன்னா உடன் டான்ஸ் ஆடப்போவதாக கூறிய மலையாள நடிகர் திலீப்; மகள் மீனாட்சி கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?

தமன்னா உடன் டான்ஸ் ஆடப்போவதாக கூறிய மலையாள நடிகர் திலீப்பிடம், அவர் மகள் மீனாட்சி தள்ளி நின்று ஆடுங்கள், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Advertisment

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கலக்கி வரும் நடிகை தமன்னா முதன்முறையாக மலையாள திரையுலகில் கால் பதித்துள்ளார். அதுவும் முன்னணி மலையாள நட்சத்திரம் திலீப் கதாநாயகனாக நடிக்கும் பாந்த்ரா என்கிற படத்தில் தமன்னா நடித்துள்ளார். ஏற்கனவே திலீப்பிற்கு ராம்லீலா என்கிற மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் அருண்கோபி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தநிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் திலீப் பேசும்போது, ​​”'பாந்த்ரா' படத்தின் கதையைக் கேட்டபோது, ​​இந்தப் படத்துக்கு தமன்னா தேவை என்று உணர்ந்தேன். உண்மையைச் சொல்வதென்றால், தமன்னா இல்லை என்றால், இந்தப் படம் சாத்தியம் இல்லை என்று நாங்கள் உணர்ந்தோம். பின்னர் தமன்னாவிடம் கேட்டு, அவர் ஒப்புக் கொண்டபோது என்னால் நம்ப முடியவில்லை.

தமன்னாவுடன் இந்த படத்தில் எனக்கு ஒரு பாடல் காட்சி இருந்தது. அதுகுறித்து எனது மகள் மீனாட்சியிடம் கூறியபோது, தமன்னாவுடன் டான்ஸ் ஆடப்போகிறீர்களா? தயவு செய்து அவருடன் அருகில் இணைந்து நின்று ஆட வேண்டாம். அவரிடமிருந்து கொஞ்சம் தூரமாக தள்ளி நின்று, அவரை பார்த்துக்கொண்டே வாயசைத்து பாடுவது போல ஆடி நடித்து விடுங்கள். டான்ஸ் ஆடும் ரிஸ்க் எல்லாம் எடுத்து உங்களை டேமேஜ் பண்ணிக் கொள்ள வேண்டாம் என்று கூறி தமன்னா பற்றி பயம் காட்டினார்.

அதற்கு சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் கலக்கிய தமன்னாவின் காவாலா பாடல் டான்ஸூம் ஒரு காரணம். ஆனால் பாந்த்ரா படப்பிடிப்பில் என் மகள் இப்படி கூறினாள் என தமன்னாவிடம் இதுபற்றி கூறியபோது, அதை கேட்டுவிட்டு சிரித்த தமன்னா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க சார். எனக்கும் டான்ஸ் அவ்வளவாக ஆடத் தெரியாது. ஏதோ சொல்லிக் கொடுத்ததை செய்து வருகிறேன் என்று கூறினார். அப்போது தான் எனக்கும் அப்பாடா என நிம்மதியாக இருந்தது,என்று ஜாலியாக கூறினார் திலீப்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dileep tamanna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment