தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் பரும் நடிகர் பகத் பாசில், அதீத செயல்பாடு மற்றும் கவனக்குறைவு உணர்ச்சிவசப்படுதல் ஆகிய பாதிப்புகளை உள்ளடக்கிய ஏ.டி.ஹெச்.டி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் மாமன்னன் என ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பகத் பாசில், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் தமிழில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பகத் பாசில், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் என்ற படத்தில் நடித்திருந்தார். கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வரும் ஒரு உள்ளூர் ரவுடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் மலையாளத்தில் வெளியாக 2024-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொத்தமங்கலத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகத் பாசில், தனக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பது குறித்து கூறியுள்ளார். இந்த பாதிப்பு பற்றி தெரிந்துகொண்ட நான், கிராமத்தில் சுற்றித்திரியும், குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். சிறுவயதில் இதை கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம் என்று டாக்டர் கூறினார்.
41 வயதில் இதை கண்டறிந்தால், குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன் என் பகத் பாசில் தெரிவித்துள்ளார். கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு. இந்த பாதிப்பு ஏற்படும்போது. மூளையின் கவனம், நடத்தை, உந்துவிசை கட்டுப்பாட்டை கட்டப்படுத்தும் திறனை பாதிக்கும். இது குழந்தைகளுக்கு பொதுவானது என்றாலும் பெரியவர்களையும் பாதிக்கும் ஒரு முக்கிய பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“