மலையாள நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமானநிலைய கேட் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில், ஆர்.ஜி.ஐ விமான நிலைய போலீஸாரால் சனிக்கிழமை நகர காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Malayalam actor Vinayakan booked for ‘rude behaviour’ at Hyderabad airport
குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் விநாயகன் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
கொச்சியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்குப் பறந்துகொண்டிருந்த நடிகர் விநாயகன், சனிக்கிழமை மாலை விமான நிறுவனத்தின் கேட் ஊழியர்களிடம் தகராறு செய்து அநாகரீகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு விநாயகன் சி.ஐ.எஸ்.எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டார்.
சி.ஐ.எஸ்.எஃப் அளித்த புகாரின் பேரில் விநாயகன் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கம்மட்டிபாடம், தொட்டப்பன் போன்ற மலையாளப் படங்களில் குணச்சித்திர நடிகராக தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர் விநாயகன்.
கொச்சியைச் சேர்ந்த விநாயகன், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்ததற்காக பரவலாகப் பாராட்டப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“