கேரவினில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பகிர்வது தெரியவந்தவுடன் ஏன் நடிகை ராதிகா உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்று மலையாள நடிகை பாக்யலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை ராதிகா பேட்டி அளித்திருந்தார் “ கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துகொண்டு இருந்தார்கள். மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது இது நடந்தது. இதை அங்கிருந்த ஆண்கள் போனில் பார்த்துகொண்டு சிரித்துகொண்டிருந்தார்கள். இந்நிலையில் இது தெரிந்து ஹோட்டல் அறையில் நான் உடை மாற்றினேன். இதைத்தொடர்ந்து கேரவனில் உள்ளவர்களை செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்தேன். பல நடிகைகள், தன்னிடம் தவறாக நடந்துகொள்வார்கள் என்று பயந்து என் அறையில் தங்கிக்கொள்வார்கள் ” என்று கூறினார்.
இந்நிலையில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பகிர்வது தெரியவந்தவுடன், ஏன் வெளிப்படுத்தவில்லை என்று மலையாள நடிகை பாக்யலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார். ’பிரபலமான ராதிகா, வேறு பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவமாக கருதி இதை மறைத்திருந்தால் அது சரியல்ல’ என்றும் அவர் கூறினார். மேலும் தங்களுக்கு கேரவன் வேண்டாம் என்று கூறும் தைரியம் பெண்களுக்கு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரவேனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக ராதிகா பேட்டி அளித்திருந்த நிலையில், அவரிடம் விசாரிக்க கேரள நடிகர்களின் பாலியல் புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“