‘கோ கோ’, ‘சூப்பர் சரண்யா’ ஆகிய மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை மமிதா பைஜு இப்போது, சூர்யா நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘#சூர்யா41’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மமிதா, திங்கட்கிழமை படப்பிடிப்பில் இணைந்தார், படத்தில் அவர் ஒரு கிராமத்து பெண்ணாக நடிப்பது போல் தெரிகிறது.
நடிகை மமிதா 22 ஜூன் 2001 அன்று கேரளா மாநிலம் கோட்டயம் அருகே, கிடங்கூரில் பிறந்தார். இவரது தந்தை பைஜூ கே. ஒரு தொழில்முறை மருத்துவர், அம்மா மினி பைஜூ ஹோம் மேக்கர். மமிதாவுக்கு மிதுன் பிஜு என்ற மூத்த சகோரரும் இருக்கிறார்.
மமிதா தனது ஆரம்பப் பள்ளிக் கல்வியை கட்டாச்சிராவில் உள்ள மேரி மவுண்ட் பப்ளிக் பள்ளியில் படித்தார். பிறகு கிடங்கூர் என்எஸ்எஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தார்.
மமிதா 2017 ஆம் ஆண்டு சர்வோபரி பாலகரன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானார். கோ கோ, சூப்பர் சரண்யா, மேலும் அவர் நடித்த சில படங்கள் மமிதாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த்து.
இந்நிலையில், இப்போது சூர்யா 41 படத்தின் மூலம், மமிதா தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார், பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சூர்யா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் பாலாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
”வரவிருக்கும் படத்திற்கான உற்சாகத்துக்கு அளவே இல்லை. “எனது வழிகாட்டியான டைரக்டர் பாலா அண்ணா, ஆக்ஷன் சொல்வதற்காகக் காத்திருந்தேன்!!!… 18 வருடங்களுக்குப் பிறகு, இன்று மகிழ்ச்சி…! இந்த நேரம்… உங்கள் எல்லா வாழ்த்துகளும் எங்களுக்கு தேவை! #Suriya41,” என்று திங்கள்கிழமை (மார்ச் 28) சூர்யா ட்வீட் செய்தார்.
‘#சூர்யா41’ படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கி நடந்து வருகிறது.
மேலும் சூர்யா வெற்றி மாறனுடன் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“