/indian-express-tamil/media/media_files/Dop6t5mcX8nGnE00PPOS.jpg)
பாடகி லட்சுமி ஜெயன்
கேரளாவை சேர்ந்த பெண் பாடகி ஒருவர் ஆண் மற்றும் பெண் குரலில் பாடல் பாடும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர் ஒரு திருநங்கை என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது பாடகியின் ரசிகர்களே பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மலையாள சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் லட்சுமி ஜெயின். கடந்த 2021-ம் ஆண்டு மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர், 15 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தாலும், தனது திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நிகழ்ச்சிக்கு பின், தன்னை ஒரு பாடகியாக மாற்றிக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் லட்சுமி ஜெயின்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாடல் பாடியுள்ளார். இதில் ரோஜா படத்தில் இடம்பெற்ற ''புது வெள்ளை மழை'' என்ற பாடலை பாடியிருந்த இவர், பெண் குரல் மட்டுமல்லாமல் ஆண் குரலையும் சேர்ந்து பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லட்சுமி ஜெயினின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் ஒரு சிலர் அவரை திருநங்கை என்று விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே லட்சுமி ஜெயின் பற்றி நன்கு அறிந்த அவரின் ரசிகர் ஒருவர், ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்த 100 சதவீதம் பெண்தான் லட்சுமி ஜெயின். பிக்பாஸ் நட்சத்திரம், ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். அவரை பற்றி தெரியாமல் தேவையில்லாமல் உளறக்கூடாது என்றும் பதிலடி கொடுத்துள்ளார் அந்த ரசிகர்.
இதுபோல சில பெண்கள் இரு குரல்களில் பாடுகிறார்கள். ஆனா இந்தப் பெண்ணின் ஆண் வாய்ஸ் செம கம்பீரம் pic.twitter.com/wRoKB8NXjM
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 19, 2024
அதே சமயம் நெட்டிசன்கள் பலரும் லட்சுமி ஜெயின் ஆண் குரலில் பாடுவதற்கு பாராட்டு தெரிவித்து வீடியோவின் கீழ் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். லட்சுமி ஜெயினுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.