New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/01/mohanlal-daughter-2025-07-01-18-52-32.jpg)
ரஜினி, கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், உள்ளிட்ட பல நடிகர்கள் வாரிசுகள் சினிமாவில் நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். அதேபோல், மலையாள சினிமாவில், சுகுமாரின் மகன்கள் ப்ரித்விராஜ், இந்திரஜித் ஆகிய இருவருமே நடிகர்களாக உள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால், பெரும்பாலும் மலையாள படங்களில் தான் நடிக்கிறார் என்றாலும் இந்தியா முழுவதும் அவருக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், ஏற்கனவே அவரது மகள் ப்ரனவ் மோகன்லால் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவரது மகள் விஸ்மயா மோகன்லாலும் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் வாரிசுகள் நடிகர் நடிகைகளாக அறிமுகமாகவது அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவை பொருத்தவரை, ரஜினி, கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், உள்ளிட்ட பல நடிகர்கள் வாரிசுகள் சினிமாவில் நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். அதேபோல், மலையாள சினிமாவில், சுகுமாரின் மகன்கள் ப்ரித்விராஜ், இந்திரஜித் ஆகிய இருவருமே நடிகர்களாக உள்ளனர்.
அதேபோல் மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில், மற்றொரு மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மோகன்லால் மகன் ப்ரனவ் மோகன்லாலும் பல நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான மோகன்லாலின் எல்2 எம்புரான் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தின் இறுதிக்கட்டத்தில் இளம்வயது மோகன்லால் கேரக்டரில், ப்ரனவ் மோகன்லால் தான் நடித்திருப்பார்.
இதன் மூலம் லூசிஃபர் படத்தின் 3-ம் பாகம் எடுக்கும்போது அதில் ஹீரோவாக ப்ரனவ் மோகன்லால் தான் நடிப்பார். 2002-ம் ஆண்டு ஒன்னாமேன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ப்ரனவ் மோகன்லால், தமிழில் வெளியான பாபநாசம், மலையாளத்தில் வெளியான லைஃப் ஆப் ஜோசுட்டி ஆகிய படங்களில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு 2018-ம் ஆண்டு ஆதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதனிடையே தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மயாவும் நடிகையாக அறிமுகமாக உள்ளார். மலையாளத்தில் 2018 படத்தை இயக்கி பெரிய வெற்றியை பதிவு செய்த ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் துடக்கம் என்ற படத்தின் மூலம் விஸ்மயா நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் விஸ்மயா பெயர் மட்டும் தான் இருக்கிறது என்பதால் இது நாயகியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட ஒரு படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ரனவ் மோகன்லால், என் சகோதரி சினிமா உலகில் முதல் அடி எடுத்து வைக்கிறாள். அவள் இந்தப் பயணத்தில் செல்லும்போது நம்பமுடியாத அளவிற்கு பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.