Advertisment
Presenting Partner
Desktop GIF

உலகளவில் ரூ 1,000 கோடியை கடந்த மலையாள சினிமா : தமிழ் திரைப்படங்களின் நிலை என்ன? விரிவான அலசல்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி, திரைப்படங்கள் பாக்ஸ்ஆபீஸில் போராடி வரும் நிலையில், மலையாளத் திரையுலகம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1,000 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Manjummel Boys Goat Life Avesham

மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம் மற்றும் ஆவேசம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்தாலும், பாக்ஸ்ஆபீஸில் வெற்றியை பெற போராடி வரும் நிலையில், சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதை பெரிய வசூல் செய்த படமாக மாற்றும் வித்தையில் மலையாள திரையுலகம் செழித்து வருகிறது. 2024-ம் ஆண்டு மாலையத்தில் வெளியான சில படங்கள் தொடர்ந்து பாக்ஸ்ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Malayalam film industry zooms past Rs 1,000 crore global gross mark while Bollywood, Telugu, Tamil films continue to bleed

நடப்பு ஆண்டில் பாதி முடிந்துவிட்ட நிலையில், தமிழ், தெலுங்கு இந்தி, உள்ளிட்ட மொழிப்படங்கள், பாக்ஸ்ஆபீஸில் தோல்வியை சந்தித்து மீண்டும் எழுந்து வர போராடி வருகிறது. அதே சமயம், மலையாளத் திரையுலகம் ஏற்கனவே பல பிளாக்பஸ்டர்களையும், பல சூப்பர்ஹிட்களையும் கொடுத்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1,000 கோடியைத் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

மலையாள திரையுலகில் சமீபத்தில் வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் ரூ, 240.94 கோடி, ஆடுஜீவிதம் (கோட் லைஃப்) ரூ. 157.44 கோடி மற்றும் ஆவேசம் ரூ. 153.52 கோடி என மலையாள சினிமாவின் இதுவரை மொத்த வசூலில் 55 சதவீத பங்களிப்பை இந்த மூன்று படங்கள் மட்டுமே பெற்றுள்ளன என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த வாரம், பிருத்விராஜ் சுகுமாரன், பாசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வர ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான குருவாயூரம்பல நடையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக, 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மலையாள சினிமாவின் ஒட்டுமொத்த வசூல் ரூ.985 கோடியை எட்டியதாக மாத்ருபூமி செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போது குருவாயூரம்பல நடையின் உலகளாவிய வசூல் ரூ. 30 கோடியைத் தாண்டியுள்ளது என்ற சாக்னில்க்கின் அறிக்கையுடன் இதையும் இணைத்து, இத்துறையின் மொத்த உலகளாவிய வசூல் ரூ. 1,000 கோடியைத் தாண்டி 2024 ஐ மலையாள சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாக மாற்றியுள்ளது.

கடந்த ஆண்டு, மாத்ருபூமி வெளியிட்ட ஒரு செய்தியில், 2018, கண்ணூர் ஸ்குவார்ட், ஆர்டிஎக்ஸ், நேரு மற்றும் ரோமன்சம் போன்ற திரைப்படங்களின் வெற்றியின் மூலம் மலையாள சினிமா துறையானது உலகளவில் சுமார் 500 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கண்டுள்ளது. 2024ல் இந்தியாவின் மொத்த வசூலில் மலையாள சினிமா இதுவரை 20 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது, பாலிவுட் 38 சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த முதல் பத்து படங்களில் ஐந்து, மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேசம், பிரேமலு மற்றும் பிரம்மயுகம் ஆகிய படங்கள் 2024 இல் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், மஞ்சுமெல் பாய்ஸ் ரூ. 141.99 கோடி, ஆடுஜீவிதம் ரூ. 85.08 கோடி, ஆவேசம் ரூ. 84.73 கோடி, பிரேமலு ரூ. 75.64 கோடி, பிரமயுகம் ரூ. 2703 கோடி வசூலித்து மலையாள திரைத்துறையின் மொத்த உள்நாட்டு வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டியுள்ளது,

பாலிவுட்டில், ஷாருக்கானின் பெரும் மறுபிரவேசம் மற்றும் பல ரூ 500 கோடி வசூல் காரணமாக கடந்த ஆண்டு இரண்டு ரூ 1,000 கோடி வசூலைக் கண்ட பாலிவுட், இந்த ஆண்டு பாக்ஸ்ஆபீஸில் போராடி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெற்றிபெற்ற பல நடச்த்திரங்கள் நடப்பு ஆண்டில் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த ஃபைட்டர், ரூ.358.89 கோடி வசூலித்தது.

இன்றைய நிலையில், பாலிவுட்டில் 2024-ல் அதிக வசூல் செய்த படம். ஷைத்தான் (ரூ. 213.64 கோடி), க்ரூ (ரூ. 151.35 கோடி), தெரி பாத்யன். உல்ஜா ஜியா (ரூ. 146.26 கோடி), மற்றும் ஆர்ட்டிகல் 370 (ரூ. 105.15 கோடி) ஆகிய படங்கள் மட்டுமே இந்த ஆண்டு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளன.

ஒரு காலத்தில் இந்தியாவின் சினிமா அரங்கில் ஆதிக்கம் செலுத்திய டோலிவுட், இந்த ஆண்டு ஹனு-மேன் மற்றும் தில்லு ஸ்கொயர் என இரண்டு வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், நாகார்ஜுனாவின் நா சாமி ரங்கா, ரவிதேஜாவின் ஈகிள், வெங்கடேஷின் சைந்தவ், விஜய் தேவரகொண்டாவின் தி ஃபேமிலி ஸ்டார் என முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

மறுபுறம், கோலிவுட் இன்னும் மோசமான நிலையில் உள்ளது, கேப்டன் மில்லர் என்ற ஒரே ஒரு படம் இந்த ஆண்டு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்கள் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment