Advertisment

சாதனை வசூல் செய்த மஞ்ஜூமேல் பாய்ஸ்... ஒ.டி.டி வெளியீடு எப்போது? வெளியான முக்கிய தகவல்

மலையதளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் ஒடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Manjumel Boys

மஞ்ஜூமேல் பாய்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் ஒடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான படம் மஞ்ஜூமேல் பாய்ஸ். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் தமிழக பாக்ஸ் ஆபீஸ் வசூலை மிஞ்சும் வகையில், மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. இந்த படம் ஒரே வாரத்தில் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.கோடி வசூலித்துள்ளது. மேலும் மலையாளத்தில் ரூ200 கோடிக்கு மேல் வசூலித்த மஞ்ஜூமேல் பாய்ஸ் படம் ஏற்படுத்திய தாக்கம், இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காத நிலையில், படம் ஒடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.

ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் 8.5 புள்ளிகள் பெற்றுள்ள மஞ்ஜூமேல் பாயஸ் திரைப்படம் வரும் மே 5-ந் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைபடம் கேரளா தாண்டி பல மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment