OTT Release: தியேட்டரில் தொடரும் வசூல் வேட்டை; தொடரும் படம் ஓ.டி.டி ரிலீஸ் தாமதமாகுமா?

மோகன்லால் நடித்த 'தொடரும்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து ரூ100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், படத்தின் ஒடிடி வெளியீடு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோகன்லால் நடித்த 'தொடரும்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து ரூ100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், படத்தின் ஒடிடி வெளியீடு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Mohanlal Thudarum

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு பல சிறப்பான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால் நடித்த 'தொடரும்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

குறிப்பாக, 'தொடரும்' திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் ரூ100 கோடி வசூல் செய்த முதல் மலையாளத் திரைப்படம் என்ற புதிய வரலாறு படைத்துள்ளது. திரையரங்குகளில் இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக, இதன் ஓடிடி வெளியீடு தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியான 4 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

தற்போது, 'தொடரும்' படத்தின் அபாரமான திரையரங்க வசூல் காரணமாக இந்த படத்தின் ஒடிடி ரிலீஸ் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 'தொடரும்' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் இப்படம் 4 வார முடிவில் ரூ5.75 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.

குறிப்பாக நான்காவது ஞாயிற்றுக்கிழமை வசூல் கணிசமாக உயர்ந்தது. நான்காவது திங்கட்கிழமையும் படத்தின் வசூல் ரூ1.29 கோடியாக இருந்தது, இது நான்காவது வெள்ளிக்கிழமையின் வசூலான ரூ1.50 கோடியுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த சரிவாகும் (14%). இதுவரை இந்தியாவில் 'தொடரும்' திரைப்படம் ரூ114.59 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. வரி உட்பட மொத்த உள்நாட்டு வசூல் ரூ135.21 கோடியாக உள்ளது.

Advertisment
Advertisements

சர்வதேச அளவிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ93 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் 'தொடரும்' திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ228.21 கோடியை எட்டியுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஸ்ட்ரீமிங் உரிமையை ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் ரூ220 கோடிக்கும் அதிகமான வசூலை 'தொடரும்' குவித்துள்ளது.

இதன் மூலம் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் 'எம்புரான்' மற்றும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படங்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Mohanlal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: