லியோ படத்தில் நடித்திருக்கும் மலையாள இளம் நட்சத்திரம்; விஜய் மகன் கேரக்டரா? மாத்யூ தாமஸின் பின்னணி இங்கே
லியோ படத்தின் கதை மற்றும் கேரக்டர்கள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிற நிலையில், வளர்ந்து வரும் மலையாள நடிகரான மாத்யூ தாமஸ் இந்தப் படத்தில் விஜய்யின் மகனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisment
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் லியோ படம் உருவாகியுள்ளதால், படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய் உடன் 15 வருட இடைவெளிக்குப் பின் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம், அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், படத்தின் கதை குறித்தும் கேரக்டர்கள் குறித்து பல்வேறு அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் விஜய்யின் மகனாக மலையாள நட்சத்திரம் மாத்யூ தாமஸ் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலில் சின்ன வயது விஜயாக மாத்யூ தாமஸ் நடித்துள்ளதாக யூகங்கள் கிளம்பிய நிலையில்,. சமீபத்தில் வெளியான அன்பெனும் பாடலில் இருவரும் இணைந்து தோன்றியதால், அவர் விஜயின் மகனாக இருக்கலாம் என்று பலரும் கூறிவருகின்றனர்.
இந்தநிலையில், பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கேரக்டரில் நடித்துள்ள மாத்யூ தாமஸ் யார் என்பதை இப்போது பார்ப்போம். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த கும்பளங்கி நைட்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மாத்யூ தாமஸ். அந்தப் படத்தில் மலையாள நட்சத்திரம் பகத் பாசில் உடன் நடித்திருந்தார்.
பின்னர் மாத்யூ தாமஸ் தண்ணீர் மத்தன் தினங்கள் என்ற படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் மம்முட்டியின் ஒன் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஆப்ரேசன் ஜாவா, ஜோ அண்ட் ஜோ உள்பட பல்வேறு படங்களில் நடித்து வந்தவர், கிறிஸ்டி படத்தில் மீண்டும் லீட் ரோலில் நடித்தார். அடுத்ததாக நெய்மர், ஜார்னி ஆஃப் லவ் 18+ படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக லியோ படத்தில் நடித்துள்ளவர், அடுத்ததாக கப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“