/tamil-ie/media/media_files/uploads/2021/04/James-Vasanthan-1.jpg)
Malaysia Astro channel vaanavil super star director Dev Suicide James Vasanthan Post
Malaysia Astro channel vaanavil super star director Dev Suicide : நாளுக்கு நாள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் இளம் வயதினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அந்த வரிசையில் மலேசியாவைச் சேர்ந்த இளம் இயக்குநர் தேவ் என்பவர் திடீரென்று தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைப் பிரபல இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
"இங்கு 'Super Singer' போல மலேஷியாவில் Astro channel-ல் 'வானவில் சூப்பர் ஸ்டார்' என்றொரு நிகழ்ச்சி உண்டு. அதைக் கடந்த சில வருடங்களாக இயக்கி வந்த, திறமை வாய்ந்த தேவ் என்னும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துகொண்டான் என்கிற செய்தி பேரிடியாக வந்தது" என்று தொடங்குகிறது ஜேம்ஸ் வசந்தன் பதிவு.
மேலும், "அவன்மேல் கோபமாக வருகிறது. அவனுக்குக் கடைசி நேரத்தில் தைரியத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்த நான் அருகில் இல்லாமல் போய்விட்டேனே என்று மனம் வேதனைப்படுகிறது.
என்மேல் அவ்வளவு பாசமும், மரியாதையும் கொண்டவன். இந்தக் கொரோனா கொடூரமெல்லாம் ஓய்ந்தபின் சென்னைக்கு வந்து என்னோடு கொஞ்ச நாள் இருந்து திரைப்பட வேலைகளைக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்தான்" என்றும் "கொரோனாவுக்கு சற்று முந்திதான் இங்கு வந்து பல கோயில்களுக்கெல்லாம் சென்றுவிட்டு என் வீட்டிற்கு வந்து நம்மூர் சாப்பாட்டை அவ்வளவு ரசித்துச் சாப்பிட்டான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏற்பாடுகளெல்லாம் செய்துகொடுத்தேன்" என்றும் தன் ஃபேஸ்புக் பதிவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவுதான் மனவேதனை இருந்தாலும், எந்தக் காலத்திலும் தற்கொலை அதற்கான முடிவல்ல. ஆனால், அதையே நோக்கிப் பயணிக்கிறார்கள் சிலர். எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதுதான் இதுபோன்ற முடிவுகளுக்கான தீர்வு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.