10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்

மிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுவிட, அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி கூட புகார் கூறுகிறார்.

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன.

வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி புகார் :

சின்மயி மட்டுமல்லாமல் மேலும் பலரும் பாலியல் ரீதியாக தாங்கள் பாதிப்புக்கு உள்ளானதை பகிர்ந்தனர். இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் வைரமுத்து குறித்து பகீர் தகவல் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் லைவ் வீடியோவும் வந்து பேசினார்.


அதில், தமிழ் சினிமா உலகம் சின்மயின் பின்னால் நிற்காமல் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. சின்மயி ஏன் இத்தனை வருடங்களாக இதை பேசவில்லை என கேள்வி எழுப்புபவர்கள் ஏன் வைரமுத்துவை நோக்கி கேள்வி எழுப்புவதில்லை. ஏன் சமூகம் குற்றம் புரிந்தவரை கேள்வி கேட்காமல் பாதிக்கப்பட்டவரை கேள்வி கேட்கிறது. என்ன பாகுபாடான சினிமா உலகம்.

நான் சன் மியூசிக்கில் பணிபுரியும் போது ஒரு இளம் தொகுப்பாளருக்கு வைரமுத்து தொல்லை கொடுத்தார். இதற்கு நானே சாட்சி. பத்து வருடங்களுக்கு முன்னர் நான் இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். குரலற்றவர்களின் குரலாக சின்மயி இருப்பதற்கு நான் அவரை பாராட்டுகிறேன் என மலேசியா வாசுதேவனின் மருமகள் மாலினி தெரிவித்துள்ளார்.

சின்மயியை தொடர்ந்து தற்போது மாலினி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு வைரமுத்துவுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close