மாஸ்டர் படத்திற்காக மலேசிய ரசிகை செய்த செயல் : வைரலாகும் புகைப்படம்

Master Tamil Movie : 150 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.

Master Tamil Movie : பிகில் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், மாளவிகா மேகனன் நாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50%  இருக்கை அனுமதியுடன் தியேட்டரில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு திரையரங்குளில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்த படம் வெளியானாலும், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இதனால் வெளிநாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில்,  மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண் மாஸ்டர் படத்தை பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்துள்ளார். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அந்த பெண் கடந்த சில வருடங்களாக மலேசியாவில் வசித்து வருகிறார். விஜய்யின் தீவிர ரசிகையான அவர், மாஸ்டர் படத்தை பார்க்க சென்னை வருவதற்காக பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அவர் சென்னை வருவது சாத்தியமல்லாமல் இருந்தது.

ஆனாலும் விடாமுயற்சி  விஸ்வரூப வெற்றி என்பது போல கடும் முயற்சி செய்து சென்னை வந்த அவர், முதல் வேலையாக மாஸ்டர் படம் பார்க்க தியேட்டர் சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தியேட்டரில், 50% இருக்கைக்குதான் அனுமதி என்ற நிலையில், அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள 150 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து ரசித்துள்ளார்.

படத்தில் விஜய்யை கண்டு, விசில் அடித்து கொண்டாடிய அவர், தியேட்டருக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று கத்திக் கூச்சலிட்டு விஜய் கத்துவதை போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், மாஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இருந்து, தான் பறந்து வந்ததாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Malaysian women booked whole theatre for watch master movie

Next Story
பாவம் இந்த மலர் பொண்ணு… செய்யாத கொலைக்கு ஜெயிலில் இருக்கும் வெற்றி!eeramana rojave vetri malar eeramana rojave
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com