Advertisment

பாலா என்னை அடித்தாரா? ’வணங்கான்’ பட நடிகை மீண்டும் விளக்கம்

வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக வீடியோவில் பேசியிருந்த நடிகை மமிதா பைஜூ, தற்போது அது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Mamitha Baiju on why left Vanangaan movie and mistreatment by director Bala Tamil News

வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mamitha Baiju | Director Bala | Tamil Cinema: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் நடிகர் சூர்யா வைத்து 'வணங்கான்' படத்தை இயக்கினார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், படம் திடீரென கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக சூர்யா திடீரென விலகினார்.

Advertisment

இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இயக்குநர் பாலா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'வணங்கான்' படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது. வணங்கான் படம் தொடர்பாக வெளிவரும் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க செய்துள்ளது. 

புகார் 

இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் அவர், “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன்; அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன்; திடீரென அவர் (இயக்குநர் பாலா) என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். 

அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை, அதனால் பதற்றமாகிவிட்டேன். அச்சமயம் எனக்கு பின்னாலிருந்த அவர் (பாலா) என்னை தோள்பட்டையில் அடித்தார். ‘நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என அவரே (இயக்குநர் பாலா) செட்டிலேயே சொல்லிவிடுவார். சிலசமயங்களில் அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். சூர்யா சார், ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்து வைத்திருந்தார். புதிதாக இணைந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை” என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், இயக்குநர் பாலா குறித்து நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகியது. இதனைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். 

விளக்கம் 

 

இந்த நிலையில், தான் பேசிய அந்த வீடியோ தொடர்பாக நடிமை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். “எனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. திரைப்பட ப்ரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்துள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார். அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில்ரீதியான கமிண்மெண்ட்டுகள் காரணமாகவே அந்தப்படத்தில் இருந்து விலகினேன்” என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment