/tamil-ie/media/media_files/uploads/2019/11/Mammootty-meets-Pinarayi-Vijayan.jpg)
Mammootty meets Pinarayi Vijayan
Mammootty's Next: மலையாள திரையுலகின் 'மெகாஸ்டார்' மம்மூட்டி, தனது நடிப்புக்காக எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டுள்ளார். இவரை மக்கள் செல்லமாக 'மம்மூகா' என்று அழைக்கிறார்கள்.
சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் சாஜின் என்ற பெயரிலே நடித்து வந்தார் மம்மூட்டி. சில படங்களுக்கு பிறகு மம்முட்டி என்று பெயரை மாற்றிக்கொண்டார். அவர் நடித்த 'நியூ டெல்லி' படம் மாபெரும் வெற்றியடைந்தது, மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.
ശ്രീ മമ്മൂട്ടി ഓഫീസിൽ വന്ന് കണ്ടു. ഒരു സിനിമാ ചിത്രീകരണത്തിനിടെ സമയം കണ്ടെത്തിയായിരുന്നു സൗഹൃദ സന്ദർശനം. @mammukkapic.twitter.com/zuYAZH2L3j
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) November 9, 2019
தமிழில் முதன் முதலில் 'மெளனம் சம்மதம்' படத்தில் அறிமுகமான மம்முட்டிக்கு, அப்படம் நல்ல ஓபனிங்காக அமைந்தது. அழகன், மக்களாட்சி போன்ற படங்களில் நடித்தப் பிறகு, ரஜினியுடன் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படம் எவர்கிரீன் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் வெளியான ’யாத்ரா’ படத்தில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக நடித்திருந்தார் மம்மூட்டி. தற்போது இவர், மலையாள அரசியலை மையப்படுத்தி உருவாகும் ‘ஒன்’ என்ற படத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கிறார். 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார். இதற்காக மரியாதை நிமித்தமாக பினராயி விஜயனை நேரில் சந்தித்திருக்கிறார் மம்மூட்டி. மம்மூட்டி தன்னை வந்து சந்தித்த விஷயத்தை, கேரள முதல்வரும் ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.