இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா, ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே நடந்து செல்லும்போது ரசிகர் ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து சென்ற நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Man pulls Sreeleela into crowd during Aashiqui 3 shoot as clueless co-star Kartik Aaryan walks on; fans demand action. Watch
பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு இயக்கி வரும் படத்தில் பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யனும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, கேங்டாக் மற்றும் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில், சமீபத்தில், டார்ஜிலிங் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான ஒரு வீடியோ வைரலானது, கார்த்திக் மற்றும் ஸ்ரீலீலா ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து செல்வதைப் பார்த்தபோது நடிகை ஸ்ரீலீலா கும்பலுக்குள் இழுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் அவரது சக நடிகர் கார்த்திக் ஆர்யன் இதை பற்றி தெரிந்துகொள்ளாமல் நடந்து சென்றார். இந்த வைரல் வீடியோ பல இணைய பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியதாகத் தெரிகிறது, சிலர் இந்த சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என்றும் சிறந்த பாதுகாப்பு தேவை என்றும் கூறினர். சமூக வலைதளங்களில், உள்ள பயனர்களில் ஒரு பகுதியினர் இது அவர்களின் வரவிருக்கும் படத்தின் ஒரு காட்சி என்று கூறி வருகின்றனர்.
வீடியோவில், கார்த்திக் மற்றும் ஸ்ரீலீலா ஒரு கூட்டத்தைக் கடந்து நடந்து சென்றபோது ஒரு நபர் நடிகையைப் பிடித்து உள்ளே இழுத்தார். கார்த்திக் முன்னால் நடந்து வந்தாலும், தனது படத்தின் நாயகி தனக்குப் பின்னால் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் அவர் திரும்பிச் சென்றார். ஸ்ரீலீலாவும் இந்த சம்பவத்தால் கலங்கி, தனது கையால் தன்னை மறைத்துக் கொண்டாள். இந்த வைரலான வீடியோவைப் பற்றி ஒரு ரசிகர் இன்ஸ்டாகிராமில், “ஸ்ரீலீலாவை இழுப்பவர்களைத் தண்டியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “இது கூட்டத்தின் பரிதாபகரமான நடத்தை, நடிகை ஸ்ரீலீலா இங்கே முற்றிலும் அதிர்ச்சியில் இருக்கிறார், எதிர்காலத்தில் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று எழுதினார். மற்றொருவர் கார்த்திக் ஆர்யனுக்கும் இதுபோன்ற கூட்டத்தில் பாதுகாப்பு தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ரெடிட்டில், இந்த முழு சம்பவமும் உண்மையில் அவர்களின் படத்திற்கான படப்பிடிப்பு காட்சியா என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். மார்ச் 28 ஆம் தேதி, டார்ஜிலிங்கில் உள்ள சிலிகுரியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஸ்ரீலீலாவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் புகைப்படத்திற்கு, “து மேரி ஜிந்தகி ஹை” என்று பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி சிக்கிம் முதல்வரையும் படக்குழுவினர் சந்தித்தள்ளனர். இந்தப் படத்தைச் சுற்றியுள்ள பரபரப்புடன், கார்த்திக்கும் ஸ்ரீலீலாவும் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியுள்ளது.
இப்போதைக்கு, அவர்களின் படத்திற்கு பெயரிடப்படவில்லை, ஆரம்பத்தில், இது ஆஷிகி 3 என்று அழைக்கப்பட்டது. இது பூஷன் குமாரின் டி-சீரிஸால் தயாரிக்கப்படுகிறது, மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளது.