ஆல்யா மானசாவின் வெறித்தனமான ரசிகரா இருப்பாரோ? பைக் ஓட்டியபடி செய்த காரியம் அப்படி!

பைக் ஓட்டும்போதுகூட ராஜா ராணி 2 சீரியலை அவ்வளவு தீவிரமாக பார்க்கிற அந்த நபர் ஆல்யா மானசாவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று சமூக ஊடகங்களில் பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

man watches raja rani 2 serial on mobile phone while riding bike, செல்போனில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச்சென்ற அந்த நபர், ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, கோவை, வைரல் வீடியோ, peson watches raja rani serial while riding bike, alya manasa, raja rani 2, police fined who watches raja rani 2 serial on mobile phone while riding bike, tamil news, coimbatore, viral video

கோவையில் ஒருவர் செல்போனில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் பைக் ஓட்டிச்சென்ற சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடங்களில் வைரலானது. இதையடுத்து, நகர போக்குவரத்து காவல்துறையினர் அந்த நபருக்கு ரூ.1200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆபத்தான முறையில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்றதால் அந்த நபர் ஆல்யா மானசாவின் வெறித்தனமான ரசிகரா இருப்பாரோ என்று சமூக ஊடகங்களில் பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சீரியல்கதான் இன்றைக்கு பிரதானமானதாக இருக்கிறது. டிவி சீரியல்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் பார்க்கிற பழக்கம் அதிகரித்திருக்கிறது. செல்போன் இணைய வசதியும் பரவலாவதற்கு முன்பு அனைவரும் சீரியல்களை டிவி வழியாகவே பார்த்துவந்தனர். ஆண்ட்ராய்ட் செல்போன் இணையவசதி பரவலான பிறகு பலரும் தங்களுக்கு விருப்பமான சீரியல்களை, ரயில், பேருந்து பயணங்களில், அலுவலகத்தில் ஓய்வு நேரங்களில், எப்படியாவது எங்கேயாவது பார்த்துவிடுகிறார்கள்.

ஆனால், கோவையில் ஒரு நபர் மிகவும் ஆபத்தான முறையில் பைக் முன்பு செல்போன் ஸ்டாண்ட்டில் செல்போனை வைத்து டிவி சீரியலைப் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில், கோவை, காந்திபுரம் இரண்டாவது மேம்பாலத்தில், செல்போனில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச்சென்ற அந்த நபர் கோவை கண்ணப்பா நகரில் வசிக்கும் முத்துசாமி (35) என்று தெரியவந்தது.

இந்த வீடியோ கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் எ.ஆர்.செந்தில்குமார் கவனத்துக்கு சென்றதையடுத்து, செல்போனில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்று போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து அவருக்கு அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார்.

இரண்டாம் நிலை காந்திபுரம் மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, ​​நகரத்தில் உள்ள கண்ணப்பா நகரைச் சேர்ந்த 35 வயதான என் முத்துசாமி தனது மொபைல் போனில் சீரியல் பார்க்கும் வீடியோவை ஒரு வாகன ஓட்டிகள் படம்பிடித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவிக்கிறது. சின்னசாமி சாலை மற்றும் 100 அடி சாலை, வியாழக்கிழமை இரவு அவரது மொபைல் போனில் மற்றும் சமூக ஊடகங்களில் அதையே பரப்பியது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) எஸ் ஆர் செந்தில்குமார் வெள்ளிக்கிழமை அறிந்ததும், அவர் வாகன ஓட்டியை கண்டுபிடித்து போக்குவரத்து விதிமீறலுக்காக தண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், செல்போனில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்ற அந்த நபர், மசாலா தயாரிக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும், கோவை கண்ணப்பநகரில் வசிக்கும் முத்துசாமி என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, கோவை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட முத்துசாமிக்கு ரூ.1,2000 அபராதம் விதித்தனர்.

பைக் ஓட்டும்போதுகூட அப்படி என்ன சுவாரஸ்யமான டிவி சீரியலை பார்த்திருப்பார் அந்த நபர் என்று கேள்வி எழுகிறதா? அந்த நபர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலை மொபைல் ஆப்பில் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்றுள்ளார். போலீசார் முத்துசாமியின் பைக்கிலிருந்து மொபைல் போன் ஸ்டாண்டை அகற்றிவிட்டு, வாகனத்தில் செல்லும்போது போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜா ராணி 2 சீரியலில் நடிகை ஆல்யா மானசா மற்றும் சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். இதையடுத்துதான், 2வது பாகத்திலும் ஆல்யா மானசா நடித்து வருகிறார்.

டிவி சீரியல் பார்த்துகொண்டே பைக் ஓட்டிச்சென்ற நபருக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனமும் அறிவுரையும் தெரிவித்தனர். அதே நேரத்தில், பைக் ஓட்டும்போதுகூட ராஜா ராணி 2 சீரியலை அவ்வளவு தீவிரமாக பார்க்கிற அந்த நபர் ஆல்யா மானசாவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று சமூக ஊடகங்களில் பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man watches alya manasas raja rani 2 serial on mobile phone while riding bike police fined

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express