கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்துப்ச்போயிருக்கிறது. இதனால் இந்தியா 4-வது பொது முடக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் மறைவு, ரசிகர்களையும், சக திரையுலகினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் இசைக் கலைஞர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
#RIP Prakash Hariharan.
Too early to leave..An efficient Electric Mandolin player who had played numerous music pieces in my films so far.. Totally in a devastated state hearing this news..My prayers for Prakash’s family pic.twitter.com/Qx67qvhOGs— D.IMMAN (@immancomposer) May 16, 2020
இசையமைப்பாளர் டி.இமானின் எண்ணற்ற பாடல்களுக்கு இசையமைத்த மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் தற்போது மரணம் அடைந்துளளர். இந்த துக்க செய்தியை தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட இசையமைப்பாளர் இமான் கூறும்போது “இந்த இறப்பு மிக சீக்கிரம் . எனது பல பாடல்களில் எலக்ட்ரிக் மாண்டலின் இசைக்கருவி வாசித்தவர். இந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”