எம்.ஜி.ஆர் முதல் பாரதிராஜா கமல்ஹாசன் வரை பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் வெற்றி பெற்றுள்ளார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் காவியமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி 2 பாகங்களாக மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாகம் நாளை மறுநாள் (செப் 30) பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் சேர்ந்து மணிரத்னத்தின் மெட்ராஜ் டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு எழுத்தாளது ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர். ஒரு நாவலை திரைப்படமாக மாற்றுவது எப்போதுமே இயக்குனர்களுக்கு பெரிய சவால் தான். பொன்னியின் செல்வனைத் திரைக்கதையாக மாற்றும்போது மணிரத்னமும் அத்தகைய சவால்களை எதிர்கொண்டுள்ளார். ஆனாலும், அவர் படத்தில் எது இருக்க வேண்டும், எது இருக்க வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்துள்ளார்.
மேலும் “நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலை ஒரு ஸ்கிரிப்டாக மாற்றும்போது, நீங்கள் சில புணைவுகளை பின்பற்றி அதனுடன் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறி படத்திற்கு முன் நான் கேட்ட சிறந்த வரியை என் எழுத்தாளர் சொன்னார். ஆனால் ‘புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு அதை தள்ளி வைத்துவிட்டு அதன்பிறகு திரைக்கதை எழுதுங்கள்’ என்று ரத்னம் பிலிம் சார்பில் எழுத்தாளரிடம் கூறப்பட்டுள்ளது.
இதனால் கல்கி உருவாக்கிய சோழர்களின் உலகத்தை உலாவ, நாவலில் இருந்து அடிப்படை கதை நுட்பத்தை மட்டுமே எடுத்துக்கொண்டதாக தலைசிறந்த கதாசிரியர் குறிப்பிட்பிட்டுள்ளார். “கல்கியின் நாவல் வந்தியத்தேவன் என்ற ஒரு பாத்திரத்தின் வழியாக செல்கிறது, மேலும் அவர் வழியாக பயணித்து மற்ற அனைவரையும் சந்திக்கிறோம். ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகத்தை இரண்டு பாகங்களாக மாற்ற நாம் அனைவரும் எடுத்த பாதை இதுதான் என்று நினைக்கிறேன்.
சில பகுதிகளை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் சுருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில எழுத்துக்களை நீங்கள் விட்டுவிடுகிறீர்கள். எவ்வளவு பகுதிகளை எடுத்துக்கொள்கிறோமோ அதற்கு நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நாவல் மிகவும் பெரியது. பல பகுதிகளை உள்ளடக்கியது. அதேபோல் திரைப்படங்களுக்கு போதுமான பொருள் இருப்பதாக இயக்குனர் பரிந்துரைத்தார். ஆனால், எப்போதும் போல, போதுமான பட்ஜெட்டைக் உருவாக்குவது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. “இது 5 அல்லது 10 வெவ்வேறு படங்களாக செய்யப்படலாம் என்று நான் நம்புகிறேன். அதுவும் சாத்தியமாகும். ஆனால் தற்போது எங்களிடம் இருந்த பட்ஜெட் இதை விட அதிகமாக உள்ளது. அதனால் இரண்டு பாகம் போதும்”என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“