Advertisment
Presenting Partner
Desktop GIF

மணிரத்னம் முதல் லோகேஷ் வரை... இயக்குனர் ஷங்கரின் 30வது ஆண்டு விழா கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக தனக்கு விருந்து கொடுத்த மணிரத்னம் மற்றும் சுஹாசினிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் ஷங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Shankar Maniratnam

இயக்குனர் ஷங்கர் மற்றும் தமிழ் இயக்குனர்களுடன் மணிரத்னம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் 30 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தை கொண்டாடும் வகையில் இயக்குனர் மணிரத்னம் அவரது மனைவி சுஹாசினி இருவரும் ஷங்கருக்கு விருந்து வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷங்கர் 1993-ம் ஆண்டு வெளியான ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அர்ஜூன் மதுபாலா, நம்பியார், கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதேபோல் ஷங்கருக்கு ஜெண்டில்மேன் படம் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்து அவரின் சினிமா கெரியரை உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2, ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்,

இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் முத்திரை பதித்துள்ள ஷங்கர், காதல், இம்சை அரசன், வெயில் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். இதனிடையே ஷங்கர் இயக்கிய முதல் படமாக ஜெண்டில்மேன் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி வெளியானது. அதன்படி ஷங்கர் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே ஷங்கர் 30 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தை கொண்டாடும் வகையில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் சுஹாசினி இருவரும் அவருக்கு விருந்து வைத்துள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியில்,  இயக்குனர்கள் லிங்குசாமி, சசி, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷங்கர் மணிரத்னம் – சுஹாசினி இருவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில், இந்த நாளை ஏற்படுத்தி கொடுத்தற்கு மிகவும் நன்றி மணி சார்! இந்த சிறந்த மற்றும் கொண்டாடப்படும் திரைப்பட இயக்குனர்களுடன்  பழகுவது, மறக்க முடியாத ஒரு நினைவுகளை உருவாக்கியது, கார்த்திக் பாடிய சில எவர்கிரீன் இளையராஜா மற்றும் ஏ,ஆர்.ரங்மான் பாடல்களை அதிர வைப்பது போன்ற இந்த தருணங்கள் தான் நாம் சம்பாதித்த உண்மையான செல்வமாக உணர்கிறேன்! விருந்தோம்பலுக்கு நன்றி சுஹாசினி மேடம் என்று பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தில், தற்போதைய தலைமுறையின் மிக முக்கியமான இரண்டு இயக்குனர்கள் உள்ளனர். ஒருவர் மிக மூத்த இயக்குனர் மணிரத்னம், மற்றொரு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜயின் லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருந்து வரும் நிலையில், மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசனை பெயரிடப்படாத படத்தை இயக்கவுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maniratnam Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment