Advertisment

பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட டீசர் வெளியானது; ரசிகர்கள் கொண்டாட்டம்

Teaser Of Chiyaan Vikram, Aishwarya Rai Bachchan-Starrer To Be Released On July 8 At This Time,Amitabh Bachchan To Launch :1500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது

author-image
WebDesk
New Update
இவ்ளோ ஹைப் ஏத்தியும் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? 3-வது இடத்தில் பொன்னியின் செல்வன்

Mani Ratnam’s film Ponniyin Selvan

The teaser of Ponniyin Selvan directed by Mani Ratnam, will be released in five languages this evening : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான டீசர் வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.

Advertisment

இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியானது.

இந்திய அளவில் கொண்டாடப்படும் முக்கிய புதினங்களில் ஒன்று பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய இந்த புதினத்தை படிக்கும்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், இதனை திரைப்படமாக உருவாக்க பல இயக்குநர்கள் முயற்சித்தினர். ஆனாலும் இந்த முயற்சி கைகூடவில்லை.

தற்போது இயக்குநர் மணிரத்னம் இந்த புதினத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். பல கட்ட தீவிர முயற்சிக்கு பின் பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது. 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தில், விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, பிரகாஷ் ராஜ் சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தில் யார் யார் என்னென்ன கேரக்டரில் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்புகள் நாள்தோறும் இணையத்தில் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

1500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழில் நடிகர் சூர்யா, தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால், மற்றும் ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Amitabh Bachchan Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment