Chekka Chivantha Vaanam Tollywood Box Office Collection: செக்கச் சிவந்த வானம், செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா என நட்சத்திர பட்டாளமே அணிவகுத்த இந்தப் படத்திற்கு அற்புதமான ரிவ்வியூ கிடைத்தது. சினிமாத் துறையினர் பலரே படத்தை புகழ்ந்து தள்ளினர்.
செக்கச் சிவந்த வானம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எப்படி? தமிழகம் முழுவதும் 384 திரையரங்குகளிலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மொத்தம் 198 திரையரங்குகளிலும் படம் வெளியானது. இந்தியில் மணிரத்னதிற்கென மார்கெட் வேல்யூ இருப்பதால் ‘டப்பிங்’ செய்து வெளிடும் வேலைகளும் நடைபெறுகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 210 திரையரங்குகளில் படம் வெளியானது. பல வருடங்களாக வெற்றிப்படங்களை பெரிதாக மணிரத்னம் கொடுக்கவில்லை என்றாலும், அவரது படங்களுக்கென்று ஒரு வியாபாரம் தொடரவே செய்கிறது. மணிரத்னத்திற்கான பிம்பம் அது! இந்தப் படத்திலும் அது நடந்திருக்கிறது.
படம் விமர்சன ரீதியாக வென்றாலும் பெண்கள் மத்தியில் வெகு ஆர்வமில்லாத நிலையே காணப்படுகின்றது. படம் முதல் நாள் முழுக்க முழுக்க மணி படமாகவே பேசப்பட்டது. பிறகு அது பொது ரசிகர்களால் விஜய் சேதுபதியின் படமாக பார்க்கப்பட்டு வசூல் ரீதியாகவும் நல்ல நிலைமையில் போகிறது.
செக்கச் சிவந்த வானம் படம் சுமார் 25 கோடிக்கு வியாபாரம் ஆனது, சாட்டிலைட்டை சேர்க்காமல்! முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடியை சுலபமாக வசூலித்துவிட்டது. இரண்டாம் வாரம் தியேட்டர் ஸ்ட்ரென்த் குறைந்தாலும் உலகம் முழுவதும் 10 கோடியை வசூலிக்கும் என்று நிச்சயமாக சொல்கிறது திரை வட்டாரம்.
மேலும் மணிரத்னம் படம் மற்ற மொழிகளில் ரைட்ஸ் மற்றும் டப்பிங் உரிமை என்று நல்ல விலைக்குப் போகும். சாட்டிலைட் உரிமை எல்லாம் கணக்கில் கொண்டால் 50 கோடிக்கு அதிகமாகவே சென்று சாதனை படைக்கும் என்பது நிச்சயம். தயாரிப்பு செலவு 12 முதல் 16 கோடி.
ஆக, பாக்ஸ் ஆபீஸில் செக்கச் சிவந்த வானம் சிரிக்கிறது.
திராவிட ஜீவா