விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளனர் மணி – சோபியா தம்பதியினர்.
விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. முதலில் பெண் நட்சத்திரங்கள் மட்டும் கலந்துக் கொண்டு மிஸஸ் சின்னத்திரை என ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சி பின்னர், தம்பதியராக கலந்து கொள்ளுமாறு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஆனது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேறபை அடுத்து, தற்போது மூன்றாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
மூன்று சீசன்களிலும் நடுவராக நீயா நானா கோபிநாத் மற்று தேவதர்ஷினி இருந்து வருகின்றனர். நிகழ்ச்சியானது கணவன் மனைவிக்குள் எந்தளவு புரிந்து கொள்ளல் மட்டும் விட்டு கொடுத்தல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சுற்றுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த மூன்றாவது சீசனில், வினோத், சரத், திவாகர், ராச்மோகன், நந்தினி, தீபா உள்ளிட்டோர் தங்கள் இணையரோடு கலந்துக் கொண்டுள்ளனர். இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்கள் மணிகண்டன் – சோபியா தம்பதியினர். நடன ஜோடிகளான இவர்கள், நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் மணி – சோபியா ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியின் நடுவர்கள் மணி – சோபியா சில தனிப்பட்ட காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளனர் என்று கூறினார்கள். தற்போது, இது குறித்து, சோபியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதில், தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னியுங்கள். எனது இன்பாக்ஸ் முழுக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விகளால் நிறைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள், மருத்துவ காரணங்களால், மருத்துவர்கள் என்னை முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள், அதனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இதனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. நிச்சயமாக வைல்ட் கார்டு சுற்றில் கலந்துக் கொள்வோம், எங்கள் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/Sofia.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil