மணிமேகலை- உசேன் தம்பதி சென்னையில் ப்ரீமியம் அபார்ட்மென்ட் வாங்கி உள்ளனர். இது குறித்து இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்து மணிமேகலை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் மணிமேகலை. நீண்ட நாட்களாக சன் மியூசிக்கில் பணியாற்றி வந்த மணிமேகலை விஜய் டி.வியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இதற்கிடையில் உசேன் என்பவரை மணிமேகலை திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு மணிமேகலை வீட்டார் ஒப்புக் கொள்ளாத நிலையில் அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்தனர். இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின் இருவரும் தங்கள் வேலையை திறப்பட செய்து வந்தனர். இருவரும் தங்கள் துறையில் பிரபலமடைந்தனர்.
இந்தநிலையில், திருமண ஆன புதிதில் வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம் இன்று சென்னையில் ப்ரீமியம் அபார்ட்மென்ட் வாங்கி உள்ளோம் எனக் கூறி மணிமேகலை உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், எங்கள் திருமண வாழ்வு குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். திருமண ஆன புதிதில் ரூ. 10 ஆயிரம் வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம்.
இன்று சென்னையில் ப்ரீமியம் அபார்ட்மென்ட் வாங்கி உள்ளோம். வாழ்க்கையை யாருடைய சப்போர்டும் இன்றி ஜீரோவில் தொடங்கி இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம். இது எங்களது பெரிய சாதனை. மகிழ்ச்சியாக உள்ளது. நாளை(இன்று டிச 6) எங்களது திருமண நாளை கொண்டாட உள்ளோம். இந்த தருணத்தில் வீடு வாங்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“