/indian-express-tamil/media/media_files/qX4vzJRdXE8IPpk5GF2D.jpg)
Manimegalai Vs Priyanka
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பிப் பார்க்கின்றனர். இந்த சீசனில் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் 'குக் வித் கோமாளி' 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'சுயமரியாதைதான் முக்கியம்' என்றும் 'இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்' என்றும் வேதனையுடன் கூறியிருந்தார். .
மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாகத்தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வெளிவந்ததிலிருந்து மணிமேகலைக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு எதிராகவும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மணிமேகலை- பிரியங்கா இடையே நடந்த விஷயம் குறித்து விஜய் டிவி தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்ததை ஆர்.ஜே. ஷா, தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். பிறகு உடனே அந்த வீடியோவை நீக்கிவிட்டார். ஆனாலும் அவர் பேசியது அதற்குள் வைரலாகி விட்டது.
அந்த வீடியோவில் ஷா பேசியது; ‘இந்த சீசன் முடியும் வரை நீங்கதான் விஜே.. எல்லோர்க்கூடயும் நல்லா பழகணும். இதுதான் உங்க டாஸ்க். அதை செய்ய முடியாதுனா, வெளியே போங்க, என்று தயாரிப்பு நிறுவனமே சொல்லி மணிமேகலையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டது. மணிமேகலை ஒன்னும் தானா வெளியே வரல.
வெளியே வந்த மணிமேகலை இதுகுறித்து வீடியோ போட்டதில்கூட, விஜய் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு மாற்று கருத்து உள்ளது..
இங்கு நடப்பதை வெளியே பேசக்கூடாது என்று தெரிந்தும், மணிமேகலை இப்போது செய்திருப்பது விஜய் டிவிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை காயப்படுத்தியிருக்கிறது. தொகுப்பாளர் இடம் கிடைத்தும்கூட, தனக்கு செட் ஆகவில்லை என்று ஏதோ ஒரு கோபத்தில் அவசரப்பட்டு மணிமேகலை வெளியே சென்றுவிட்டார்...
நாங்கள் இதுவரை புரொபஷனலாக இருந்து வருகிறோம், மணிமேகலை புரொபஷனலாக இருந்திருக்கிறாரா? அடுத்த சீசனில் பிரியங்கா இருக்க மாட்டாங்க.. அதுக்குள்ள மணிமேகலை ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும்? அவங்க தலையில் அவுங்களே மண்ணை வாரி போட்டுக்கிட்டாங்க’ என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சொன்னதாக ஆர்ஜே ஷா அந்த வீடியோவில் பேசினார்.
இந்த விஷயம் இப்போது சோஷியல் மீடியாவில் மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.