பிரபல ஆங்கர் மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளியில் ஆடத் தெரியாமல் பட்ட அவஸ்தை பற்றி தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே இவர்கள் டான்ஸ் ஆடுறாங்களா... விளையாடுறாங்களா? நம்ம மணிமேகலையா இது? சுவாரஸியமாகப் பேசப்பட்டு வருகிறது.
2010 ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஆங்கராக அறிமுகமான கபிரபல தொலைக்காட்சி ஆங்கர் மணிமேகலை. இவர் சன் டிவியில் ஃபிரான்கா சொல்லட்டா என்று தொடங்கிய நிகழ்ச்சி பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, அவர் சன் டிவி, கே.டிவி, சன் நியூஸ் ஆகிய சன் நெட்வொர்க் டிவிகளில் பிரபலங்களை நேர்காணல் செய்து புகழ்பெற்றார். அதே நேரத்தில் தன்னை ஒரு டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொடர்ந்து வந்தார்.
டிவி ஆங்கர் மணிமேகலை, உதவி நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி டிசம்பர் 6, 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டார்.
ஹுசைன் அண்மையில், ஒரு நாள் மணிமேகலை சமைக்கும்போது குக்கரைத் திறந்தபோது திடீரென குக்கர் வெடித்தது அந்த வேடிக்கையான வீடியோவை பரபரப்பாக பேசப்பட்டது. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை இப்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த வீடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜே மணிமேகலையும் அவரது காதல் கணவர் ஹுசைனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு மாஸாக வருகின்றனர். பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ஹுசைன் மாஸாக டான்ஸ் ஆடுகிறார். ஆனால், மணிமேகலையால் அவருக்கு இணையாக டான்ஸ் ஆட முடியாமல் திகைத்து நிற்கிறார். ஆனால், ஹுசைன் மணிமேகலையைத் தூக்கி வளைத்து பயங்கரமாக டான்ஸ் ஆடுகிறார். மணிமேகலை ஒரு கட்டத்தில் டான்ஸ் ஆடமுடியாமல் கீழே சாய்ந்துவிட்டபிறகும் ஹுசைன் விடாமல் சுழற்றுகிறார்.
இதைப்பார்க்கும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இவர்கள் டான்ஸ் ஆடுகிறார்களா? இல்லை விளையாடுகிறார்களா? நம்ம மணிமேகலையா என்று சுவாரஸியமாக பேசி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”