Advertisment

மெகா பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்: முக்கிய வேடத்தில் நயன்தாரா!

பாகுபலியை மிஞ்சும் விதத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.

author-image
WebDesk
Apr 07, 2019 11:39 IST
New Update
Tamil Nadu News today Live updates

Tamil Nadu News today Live updates

Ponniyin Selvan: இயக்குநர் மணிரத்னம் இறுதியாக ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Advertisment

அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா என மிகப்பெரிய நடிப்புப் பட்டாளமே அதில் நடித்திருந்தார்கள்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தைப் பற்றி மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதாவது பொன்னியின் செல்வனை ஒரே பாகமாக இயக்குவதில் சிக்கல் இருப்பதால், பாகுபலியைப் போல் இரண்டு பாகமாக உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் மணி.

அதோடு பாகுபலியை மிஞ்சும் விதத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதாம். இதற்கு சுமார் 800 கோடிக்கும் மேல் பட்ஜெட் டிக் செய்யப்பட்டுள்ளதாம்.

Nayanthara Nayanthara

தவிர, இந்தப் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். பொன்னியின் செல்வன் கதையில், பல்வேறு வேடங்களில் பேரழியாக வந்து, நந்தினி என்ற கதாபாத்திரம் மோசடி செய்யும்.

இந்த வேடத்தில் ஐஸ்வர்யா ராய் விதவிதமான கெட்டப்புகளில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்தப் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களையும் சென்னை வரவழைத்து, அவரவரின் போர்ஷன்களை விளக்க இருக்கிறாராம் மணி ரத்னம். இதைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறதாம்.

#Nayanthara #Maniratnam #Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment