இவரால் என் உயிருக்கு ஆபத்து – அசுரன் நடிகை மஞ்சு வாரியர் “பரபர” குற்றச்சாட்டு

Manju warrier accuses Shrikumar Menon : மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டால் மலையாள திரையுலகம் பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது.

By: Updated: October 22, 2019, 04:08:47 PM

மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டால் மலையாள திரையுலகம் பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், என் உயிருக்கு அவரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்,அந்த புகாரில், தெகல்கா பத்திரிகையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மாத்யூ சாமுவேலின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இவரின் உதவியாலேயே, ஸ்ரீகுமார் மேனன், தனது புகழுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக்கொண்டு, என் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்து, ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அந்த புகாரில் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகுமார் மேனன் மறுப்பு : மஞ்சு வாரியரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், நீண்ட நெடிய விளக்கத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, விளம்பர பட இயக்குனராக இருந்த நான், மஞ்சு வாரியர் திரையுலகில் நுழைய சிரமப்பட்ட காலங்களில் அவருக்கு ஆதரவாக இருந்தேன். மஞ்சு வாரியரின் வங்கிக்கணக்கில் ரூ.1,500 மட்டுமே இருந்தது. அவரின் நலனுக்காக, நாந்தான் ரூ.25 லட்சத்தை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தி அவரது முன்னேற்றத்துக்கு உதவினேன்.

2017ம் ஆண்டு எனது முதல் படமான ஒடியனில், மஞ்சு வாரியரை நடிக்க செய்தேன். இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மஞ்சு வாரியர், என்ன காரணத்திற்காக என் மீது அபாண்டமாக இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் என்பது தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டை நான் எதிர்கொள்ள எத்தகைய நடவடிக்கைகளுக்கும் தயாராக உள்ளேன். அப்போது தான் உண்மை வெளியில் வரும் என்று அவர் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Manju warrier threat to life director shrikumar menon asuran dhanush

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X