Advertisment

மஞ்சுமேல் பாய்ஸ்: ‘குடிபொறுக்கிகள்’ என விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகன்; இயக்குனரின் தந்தை பதிலடி

தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தை கேரள குடிப்பொறுக்கிகள் என்று கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த படத்தின் இயக்குனரின் தந்தை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Manjummel boys jeyamohan

‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தை குடிப்பொறுக்கிகள் என்று கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த படத்தின் இயக்குனரின் தந்தை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தை குடிப்பொறுக்கிகள் என்று கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த படத்தின் இயக்குனரின் தந்தை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். 

Advertisment

இயக்குனர் சிதம்பரம் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தை சிதம்பரம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை 2006-ல் நடந்த நிஜமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 

மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் மஞ்சுமேல் பாஸ் படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக செல்வது போல, மீம்கள் வெளியானது. மலையாளப் படமான பிரேமம் படத்தைக் கொண்டாடியதைப் போல, தமிழ் சினிமா ரசிகர்கள், ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ பாய்ஸ் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான், அந்த படத்தின் மீதான எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனம் வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படம் மது குடிப்பதை ஊக்குவிக்கிறது என்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு மது குடித்துவிட்டு ரகளை செய்வதற்காக சுற்றுலா வருபவர்கள் மது குடித்துவிட்டு  காட்டில் வீசி எரிந்து உடைக்கும் பாட்டில்களால், யானைகள் காயம் அடைந்து கால் அழுகி இறக்கும் சோகம் நடக்கிறது. யானை டாக்டர் என்ற கதை எழுதியவன் என்கிற முறையில் கேரளாவில் உருவாகிவரும் குடிப் பொறுக்கிகள் கலாச்சாரத்தை இந்த மஞ்சுமேல் பாய்ஸ் படம் ஊக்குவிக்கிறது. அவர்களுக்கு நட்பு, காதல் என கூறி ஒரு அங்கீகாரத்தை அளிக்கிறது. இது மோசமான போக்கு என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சுமேல் பாஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சமூக வலைதளங்களில் பல ரசிகர்களும் சில இயக்குனர்களும் எதிர்வினையாற்றினர்.

இது போல, மதுகுடிக்கும் காட்சிகள், மலையாளப் படங்களில் மட்டுமல்ல, தமிழ் படங்களிலும் இது போன்ற காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எழுத்தாளர் ஜெயமோகனிடம் தெரிவித்தனர். மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே பகையை பரப்ப வேண்டாம் என்று எழுத்தாளரிடம் கேட்டுக் கொண்டனர்.

manjummel boys

இந்நிலையில், மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் தந்தை சதீஷ் பொதுவால் எழுத்தாளரு ஜெயமோகனுக்கு கடுமையாக எதிர்வினை யாற்றியுள்ளார். இயக்குனர் சிதம்பரத்தின் தந்தை சதீஷ் பொதுவால் தனது முகநூல் பதிவில், “படம் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஜெயமோகனைத் கோபமூட்டியதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று என் அன்பு நண்பர் ஓ.கே. ஜானி தான் கூறினார். அது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஓவியர்கள் அல்லது மீன் வெட்டும் சாதாரண மனிதர்கள். ஆறாம் அதிபதி பரம்பரையில் யாரும் இல்லை சரம் இல்லை! தொழிலாளர்களுக்கு இடையே உள்ள உறவை சிதம்பரம் காட்டியது. அது சங் பரிவாரங்களுடன் சரியாக நடக்காததில் ஆச்சரியமில்லை. ஆனால், அவர்கள் புளிச்சேரி குடித்துக்கொண்டிருக்கும் ஆறாம் அதிபதிக்கு வீழ்பவர்கள் அல்ல. நட்புதான் அதன் சாராம்சம். ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரரை கோபமூட்டியதற்காக சிதம்பரத்திற்கு ஒரு பெரிய சல்யூட்.” என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், மஞ்சுமேல் பாஸ் படத்தின் சிதம்பரத்தை கமல்ஹாசன், சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழில் தனுஷ் தனது 54வது படத்திற்காக இயக்குனர் சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Writer Jeyamohan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment