மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மொழி கடந்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டிலும் இந்த பாடம் ஹிட் அடித்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்து படத்தை கொண்டாடினர். காரணம் இந்த படம் எடுக்கப்பட்ட கதை களம் மற்றும் பாடல்.
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற சம்பவம் மற்றும் குணா படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்’ என்ற ஃபேமஸ் பாடலை படக்குழு பயன்படுத்திய விதம் தமிழக ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கண்மணி அன்போடு காதலன் பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் இருந்து மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பபட்டது.
பாடலுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு உரிமை பெறாததற்காக இழப்பீடு கோரி தயாரிப்பாளர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் இளையராஜா தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது.
வக்கீல் நோட்டீஸ் கிடைத்ததும் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்ததாகவும், படத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு இளையராஜா இழப்பீடாக ரூ.2 கோடி கேட்டதாகவும் கூறப்பட்டது.
இறுதியாக பேச்சுவார்த்தையின் முடிவில் ரூ.60 லட்சத்திற்கு ஒப்பந்தம் முடிவடைந்ததாகவும் இளையராஜாவிற்கு மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் அந்தத் தொகையை செலுத்தி சட்டச் சிக்கலைத் தீர்த்தாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து இளையராஜா தரப்பிடம் இருந்தோ,
மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் jரப்பிடம் இருந்தோ அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“