பாலிவுட்டில் அமிதாப் பச்சன் குடும்பத்திற்குப் பிறகு, இளம் நடிகை ரேச்சல் வைட்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இவர் கோலிவுட்டில் அஜித்தின் மங்காத்தாவில் சிறப்புத் தோற்றத்துடன் அறிமுகமானார். கொல்கத்தாவில் வசிக்கும் இந்த அழகான நடிகை, தனது சமூக வலைதள பக்கத்தில், தான் கோவிட் 19-க்கு நேர்மறை சோதனை செய்திருப்பதாகவும், தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
‘முடிந்தளவு அமைதியாக இருந்தேன்’: ரவீந்தர், சூர்ய தேவி மீது வனிதா போலீஸில் புகார்
தனது படத்தைப் பகிர்ந்துக் கொண்ட ரேச்சல், “கடந்த 2 நாட்களில் கிடைத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. என்னால் செய்திகளுக்கும் அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை, மன்னிக்கவும். ஒரு “நேர்மறை” பதிலை ஜீரணிக்க எனக்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் பிடித்தன! நான் சற்று அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் நான் எப்போதுமே கூடுதல் கவனமாகவும் கூடுதல் நுணுக்கமாகவும் இருப்பவள். சில நேரங்களில், இப்படியும் நடக்குமா என யோசித்தேன்.
ஆனால், நம்மால் ஒருபோதும் உறுதியாக இருக்க முடியாது. எனவே மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் சொல்லும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். கொல்கத்தாவின் மெடிகா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நன்றி. இதிலிருந்து மீண்டு வர எனக்கு உதவுவதில் அவர்களின் தீர்ப்பையும் நிபுணத்துவத்தையும் நான் நம்புகிறேன். அன்புக்கு மீண்டும் நன்றி. முககவசம் போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள். இந்த வைரஸ் குழப்பமாக உள்ளது, அதனால் குறைந்தபட்சம் நாம் தெளிவாக இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கைது: மாணவி புகார் எதிரொலி
ரேச்சல் வைட் 'உங்லி' மற்றும் 'ஹார் ஹார் பயோம்கேஷ்' படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்படுகிறார். இதற்கிடையில், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”