மங்காத்தா: இந்திய சினிமாவில் வில்லத்தன ஹீரோயிசத்தின் உச்சம்!

மங்காத்தா படத்தில் சுயநலமும் பணவெறியும் நிரம்பிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக அஜித் நடித்திருந்தார். தனது ஸ்டைல். கெட்டப், நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து எதிர்மறை நாயகன் என்னும் வகைமைக்கே ஒரு ஈர்ப்பை உருவாக்கினார் அஜித்

மங்காத்தா படத்தில் சுயநலமும் பணவெறியும் நிரம்பிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக அஜித் நடித்திருந்தார். தனது ஸ்டைல். கெட்டப், நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து எதிர்மறை நாயகன் என்னும் வகைமைக்கே ஒரு ஈர்ப்பை உருவாக்கினார் அஜித்

author-image
WebDesk
New Update
Mankatha

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ல் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம். இதில், நடித்த அஜித்குமார் ஹீரோவா அல்லது வில்லனா? என்பது இன்றளவும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. கதாநாயகன் யார்? வில்லன்  யார்? என்பதை பார்த்தாலே எளிதாகச் சொல்லிவிடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லாம். ஒரு காலத்தில் ஹீரோவாக நடிப்பவர்கள் ஹீரோக்களாகவும், வில்லன்களாக நடிப்பவர்கள் வில்லனாகவும் நடித்து வந்தனர். அந்தக் காலத்தில் பார்வையாளர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்தின் அடிப்படையில் 'கதாநாயகன்' 'வில்லன்' என்று பிரிக்கும் ஒரு தெளிவான பார்வை இருந்தது.

Advertisment

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், நாம் புரிந்துகொண்டது என்னவென்றால் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. மேலும் ஹீரோக்களின் நல்ல செயல்கள் என்று அழைக்கப்படுவது எப்போதும் இயல்பாகவே சரியாக இருக்காது. வில்லன்கள் உண்மையில் சரியாக இருந்த காலங்களும் இருந்தன. உதாரணமாக, இந்த கதாநாயகர்களில் பலர் தங்களைச் சுற்றியுள்ள பெண்களை நடத்திய விதம், அவர்கள்தான் உண்மையான வில்லன்கள் என்பதை வெளிப்படுத்தியது. இப்போது, ​​அவர்கள் அனைவரும் நம் ஒவ்வொருவரையும் போலவே, பல்வேறு அளவுகளில் கொண்ட கதாபாத்திரங்கள் மட்டுமே.

மங்காத்தா படத்தில் அஜித்குமாரின் விநாயக் மகாதேவன் ஐ.பி.எஸ். கதாபாத்திரம் ஒழுக்கம், நெறிமுறைகள் அடிப்படையில் எந்த நிலையில் உள்ளது? இந்தக் கேள்வி மிகவும் குழப்பமானதாக இருக்கிறதா? குறிப்பாக படத்தில் உண்மையில் ஒரு ஹீரோ இல்லை, ஆனால் ஒரு சில வில்லன்கள் மட்டுமே இருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவரை விட தந்திரமான, இரக்கமற்ற மற்றும் நாசீசிஸமானவர்களாகத் தெரிகிறார்கள். அவர்களில், அஜித் வில்லன்களின் வில்லன்; எதிரி கதாநாயகன். ஆமாம், அவர் தான் முக்கிய வில்லன்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

அப்பா, அம்மா (அ) காதலி போன்ற வெளிப்படையான பிரச்னைகள் உள்ள "பான்-இந்திய" கொலை படங்களைப் போல இல்லாமல், அனைத்து அட்டூழியங்களை செய்து அதனை சரியாக காட்டி கதாநாயகர்களாக நிலைநிறுத்தினாலும், விநாயக் மகாதேவன் (அஜித்) மங்காத்தாவில் ஹீரோவாக இருக்கவில்லை. அதை நன்கறிந்த 2 பேர் அஜித் குமார் மற்றும் வெங்கட் பிரபு. அவர்கள் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையான நேர்த்தியுடனும் வடிவமைத்திருந்தனர். 

முழுக்க முழுக்க கொடூரமான செயல்களைச் செய்த போதிலும், சாலார்: பார்ட்1 படத்தில் பிரபாஸ், அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் கேஜிஎஃப் படங்களில் யாஷ் போன்ற கதாபாத்திரங்கள் நல்ல இதயம் கொண்டவர்கள் என பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டுள்ளன. அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தைப் பொருட்படுத்தாமல், இயக்குநர்கள் இறுதியில் ஹீரோ நற்பண்பு கொண்டவர்கள் என்பதை திணிக்கின்றனர். இருப்பினும், மங்காத்தாவில், விநாயக் படத்தின் முடிவில் சந்தேகத்தின் பலனை கூட இழக்கிறார்.

ஒரு காலத்தில் விநாயக்கிடம் சில நன்மைகளை சுட்டிக்காட்டிய சில தெளிவற்ற தருணங்களும் செயல்களும் கூட இறுதியில் மறுக்கப்படுகின்றன. இது அவரை ஒரு தீய நபராக வெளிப்படுத்துகிறது. விநாயக் கதாபாத்திரத்தின் அறிமுகத்தில், அவர் ஒரு குற்றவாளியான ஃபைசலை கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுவதாகக் காட்டப்பட்டாலும், இதுவும் ஆறுமுக செட்டியார் கைகளில் இருந்து ரூ.500 கோடி கருப்புப் பணத்தை கொள்ளையடிக்கும் அவரது மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவர் ஊழலில் மூழ்கிய ஒரு காவல் அதிகாரி மட்டுமல்ல, விநாயக் ஒரு துரோக மனிதர், அவரது கூட்டாளியான அர்ஜுனுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறார். அதுவும் ஒருவருக்கொருவர் உதவி இல்லாமல் அவர்கள் கொள்ளையை முடிக்க முடியாது என்பதால்.

தந்திரமான திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆறுமுகத்தின் மகள் சஞ்சனாவை (த்ரிஷா கிருஷ்ணன்) விநாயக் காதலிப்பதாக நம்ப வைக்கிறார். மேலும், தந்தையின் தொழில்கள், பலங்கள் மற்றும் பலவீனங்களை கண்காணிக்கிறார். அவளால் எந்தப் பயனும் இல்லாதவுடன், விநாயக் அவளை இரக்கமின்றி ஒதுக்கித் தள்ளுகிறான்.  இங்கே, அவன் அவளிடம் எந்த விதமான மன்னிப்பும் கேட்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்களுக்கிடையேயான விஷயங்கள் முடிந்துவிட்டன என்ற செய்தியை அவளுக்கு அனுப்புகிறார். அவள் முன் ஓடும் காரில் இருந்து அவளுடைய தந்தையை தூக்கி எறிவதன் மூலம் கொடூர மனம்படைத்தவர் என்றும், “strictly no rules” என்பதையும் காட்டுகிறது. 

மங்காத்தா அஜித்தின் 50வது படம். அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லானது மங்காத்தா. எந்த நேர்மையும் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அஜித்குமார் எடுத்த முடிவும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாலி (1999), வரலாறு (2006) மற்றும் பில்லா (2007) போன்ற படங்களில் அஜித் கிரே ஷேட்ஸ் கொண்ட வேடங்களில் நடித்திருந்தாலும், அனைத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நல்ல கதாபாத்திரல் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படம் பாய்ச்சலாக இருந்தது. ஏனெனில் அதில் அவர் உறுதியான வில்லனாக இருந்தார். அப்படியிருந்தும், படத்தின் மிக முக்கியமான சாதனை என்னவென்றால்,  அந்தக் கதாபாத்திரத்தையோ அல்லது அவரது செயல்களையோ படம் மகிமைப்படுத்தவில்லை.  இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை மற்றும் ஒலிப்பதிவு காரணம் என்றும் சொல்லலாம்.

வெங்கட் பிரபுவின் ஸ்கிரிப்ட் முழுவதும் அஜித்தை வில்லனாகக் கருதியது. அவரது கதாபாத்திரத்தில் ஒரு சிறிய நன்மையையோ அல்லது அவரிடம் உள்ள அடிப்படை நன்மையைக் குறிக்கும் எந்த நிகழ்வையோ வழங்கவில்லை என்றாலும், அஜித் குமார் தனது நடிப்பையும் இணைத்து கதாபாத்திரத்தை மெருகேற்றினார். கதாபாத்திரத்தின் முழுமையான வில்லத்தனத்தை வெளிப்படுத்துவதன் மூலம், விநாயகின் (மோசமான) இயல்பு குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார்.

ஒரு திரைப்பட இயக்குநராக வெங்கட்டின் அற்புதமான பார்வை மற்றும் அவரது திரைக்கதைக்கு நன்றி. எதிர்மறைக் கதாபாத்திரங்களில் அஜித் இதற்கு முன்பு நடித்தாலும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க சுயநலமும் பணவெறியும் நிரம்பிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார். அதில் தன்னுடைய அபாரமான ஸ்டைல். கெட்டப், நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து எதிர்மறை நாயகன் என்னும் வகைமைக்கே ஒரு ஈர்ப்பை உருவாக்கினார்.

இந்திய சினிமாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன், மம்மூட்டி, கஜோல், தபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடித்துள்ள நிலையில், அஜித் குமார் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல், தனது நடிப்பால் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவும் முடிந்தது. 

Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: