நடிகரும் இயக்குனருமான மனோபாலா புதன்கிழமை (மே 3) காலமானார். அவரது இறப்பு திரைத் துறையினரை புரட்டிப் போட்டது. அவரின் மறைவுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா எனப் பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் அவரின் கடைசி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. மனோபாலாவின் மகன் அவருக்காக ஓர் பாடல் பாடுகிறார்.
முன்னதாக அருகில் நிற்கும் நபர் சார் குயில பிடிச்சி பாடல் பாடலாமா சார் எனக் கேட்கிறார். அதற்கு மனோபாலாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
அமைதியாக காணப்படுகிறார். தொடர்ந்து அவரது மகனும் பாடல் பாடுகிறார். மனோபாலா கேட்டு ரசிக்கிறார். இடையிடையே மனோ பாலாவிற்கு தண்ணீர் மற்றும் உணவை ஒருவர் வழங்குகிறார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பலரும் பார்த்துள்ளனர். மனோபாலாவின் கடைசி வீடியோ காண்போதை கண் கலங்கச் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“