பேட்ட, விஸ்வாசம் படத்தில் இருந்து மரண மாஸ் மற்றும் வேட்டிக்கட்டு ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாக இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
Advertisment
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மற்றும் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பு திரைப்படமாக வெளியானது. ஜனவரி மாதத்தின் மெகா ஹிட் படங்களாக இரண்டுமே வெளியான நிலையில், தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசூலை அள்ளிக் குவித்தது.
பேட்ட, விஸ்வாசம் பாடல் வீடியோ
இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக பேட்ட படத்தின் உல்லால்லா மற்றும் விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு பாடல் வீடியோ வெளியிடப்பட்டது.
Advertisment
Advertisements
இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் இரண்டாவது பாடல் வீடியோவை இரண்டு படக்குழுவினரும் வெளியிட்டனர்.
பேட்ட படத்தின் மரண ஹிட் அடித்த மரண மாஸ் பாடல் வீடியோ வெளியானது.
அதே போல், விஸ்வாசம் படத்தில், திரையரங்கையே அதிர வைத்த வேட்டிக்கட்டு பாடல் வீடியோ வெளியானது.
இந்த இரண்டு பாடல்களும் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.