OTT: வடிவேலு- ஃபஹத் பாசில் காம்பினேஷன்... மாரீசன் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது?

‘மாரீசன்’ திரைப்படத்தில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். அது இப்போது ஓ டி டி யில் ரிலீஸ் ஆகவுள்ளது.

‘மாரீசன்’ திரைப்படத்தில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். அது இப்போது ஓ டி டி யில் ரிலீஸ் ஆகவுள்ளது.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-17 184031

மலையாளத்தில் ஏகப்பட்ட டிவி சீரியல்களை இயக்கி வந்த இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் வடிவேலுவுக்கு புதிய அடையாளத்தை கொடுத்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே காம்போ இணைந்துள்ள திரைப்படம் ‘மாரீசன்’. இந்தப் படம் கடந்த ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Advertisment
Advertisements

இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாவே இருந்தது. தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கிய சுதீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்கினார்.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. இதில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மறதி நோயுடைய வடிவேலுவை ஏமாற்றி பணம் பறிக்க முயலும் ஃபஹத் ஃபாசில் என்பது படத்தின் ஒன்லைன். இருவருக்கும் இடையிலான பயணத்தை பேசும் இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப்பெற்றது.

அதனால் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் வசூலில் சோபிக்கவில்லை.

‘மாமன்னன்’ படத்தில் இருந்ததைப் போலவே மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் வடிவேலு. சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருந்ததை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்.

அதை மிக தனது நடிப்பால் சிறப்பாக கையாண்டதாகவும், ஃபஹத் பாசில் தனக்கே உரிய நடிப்பில் மிரட்டியதாகவும் பாராட்டுகள் கிடைத்தன.

இந்நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்மவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை தமிழ் தவிர்த்து, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் காண முடியும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஃபீல் குட் படமாக செல்லும் இடங்களில் வரும் வருடலான இசையும், கதையின் போக்கு மாறும் இடத்தில் வரும் த்ரில்லர் இசையும் அருமை என்று பலர் இந்த படத்தை பாராட்டியுள்ளனர். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: